இதயம் படத்தில் அறிமுகம்.. காதல் கோட்டை படத்தில் அசத்தல்.. எழுத்தாளராக மாறிய நடிகை ஹீரா..!

முரளி நடித்த இதயம் என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு கமல்ஹாசன் உள்பட பல பிரபலங்களுடன் நடித்த நடிகை ஹீரா. காதல் கோட்டை திரைப்படத்தில் அசத்தலான ஒரு கேரக்டரில் நடித்திருந்த இவர் ஒரு கட்டத்தில் நடிப்பில் இருந்து விலகி எழுத்தாளராக மாறிவிட்டார்.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று இதயம். இன்றும் கூட இந்த படம் காதலர்களின் தேசிய கீதமாக உள்ளது. இந்த படத்தில் தான் நடிகை ஹீரா, கீதா என்ற கேரக்டரில் அறிமுகமானார். இவரை முரளி ஒருதலையாக காதலிக்கும் நிலையில் ஒரு கட்டத்தில் முரளி தன்னை காதலிக்கிறார் என்பதை புரிந்து கொண்டு அவருடன் சேர நினைக்கும் போது ஏற்படும் சோகமான முடிவு தான் இந்த படத்தின் கதை.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு நடிகை ஹீராவின் நடிப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. கடந்த 90களில் பலர் ஹீரா நடித்த கேரக்டரான கீதா என்ற பெயரை தங்களது பெண் குழந்தைகளுக்கு வைத்ததாகவும் கூறப்படுவதுண்டு.

பாதி படப்பிடிப்பில் மறைந்த பீம்சிங்.. லட்சுமியின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் படத்தின் கதை..!!

images 70

இதயம் படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை அடுத்து அவருக்கு பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக நீ பாதி நான் பாதி, என்றும் அன்புடன், தசரதன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சரத்குமார் நடித்த பேண்ட் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ஹீராவுக்கு திருப்புமுனையை கொடுத்த படம் என்றால் அது மணிரத்னம் இயக்கத்தில் உருவான திருடா திருடா என்ற படம் தான். இந்த படத்தில் அவர் ஒரு கிராமத்து பெண்ணாக அசத்தலாக நடித்திருப்பார். இந்த படத்தில் அவருக்கு மணிரத்னம் மனைவி சுகாசினி தான் பின்னணி குரல் கொடுத்திருப்பார்.

இதனை அடுத்து சரத்குமார் உடன் நம்ம அண்ணாச்சி என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரை உலகிலும், மலையாளத்திலும் சில படங்கள் நடித்தார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் மீண்டும் அவர் அவ்வை சண்முகி என்ற திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தார்.

இதனை அடுத்து அவர் கார்த்திக் நாயகனாக நடித்த சுந்தரபாண்டியன், முரளி நடித்த பூவேலி, அஜித் நடித்த தொடரும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். தொடரும் படத்தில் நடிக்கும் போது தான் அஜித்துக்கும் ஹீராவுக்கும் காதல் ஏற்பட்டதாக வதந்திகள் பரவின.

டீச்சர் என்றாலே இவங்க தான்… கடலோர கவிதைகள் ரேகா… பாரதிராஜாவால் ஜொலித்த நடிகை….!!

images 69

இந்த நிலையில் 1999 ஆம் ஆண்டு சுயம்வரம் என்ற திரைப்படத்தில் நடித்த பின்னர் ஹீரா திரையுலகில் இருந்து விலகினார். பின்னர் எழுத்தாளராக மாறினார்.   பல புத்தகங்கள் அவர் எழுதியுள்ளார். அவரது புத்தகங்கள் வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

9ஆம் வகுப்பு படிக்கும்போதே சினிமா வாய்ப்பு.. பிராமண குடும்பத்தில் பிறந்து மத போதகரான நடிகை மோகினி..!!

நடிகை ஆக அறிமுகமாகி கமல் உள்பட பல பிரபலங்களுடன் நடித்து ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து விலகி தற்போது எழுத்தாளராகவும் சமூக சேவகியாகவும் இருக்கும் ஹீராவுக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு. அவர் இப்போது நடிக்க வந்தால் கூட அவருக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் மீண்டும் திரையுலகில் நடிப்பாரா என்பது கேள்விக்குறியே.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews