நீதி நேர்மை தர்மம் நியாயத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதற்காகவே வாழ்ந்து வரும் துலாம் ராசி அன்பர்களே!!!
உங்களுக்கு கடந்த ஒரு வருடமாக வாழ்க்கையில் திருப்புமுனை தரக் கூடிய சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் .
இந்த வருடத்தில் உங்களுக்கு பக்கபலமாக இருக்கக் கூடிய கிரகங்கள் சனி பகவான் மற்றும் குருபகவான்.
இந்த வருடம் முடியும் பொழுது உங்களுக்கு நிரந்தரமான வேலை அல்லது தொழில் அமைந்துவிடும். அடுத்த பதினைந்து ஆண்டுகளுக்கு இந்த நிரந்தரமான வேலை அல்லது தொழிலில்தான் நீங்கள் ஈடுபட்டு இருக்கக் கூடிய சூழ்நிலை உண்டாகும்.
எப்போதுமே ஒரு ராசியில் பிறந்தவர்களுக்கு ஏழரைச்சனி முடிந்த மறுநாளே எந்த ஒரு நன்மையும் நடைபெறாது. அந்த அடிப்படையில் துலாம் ராசியில் பிறந்த உங்களுக்கு 27.12.2020 அன்று ஏழரைச்சனி முடிந்தது. ஆனாலும் இன்று வரை உங்களுக்கு சனி பகவான் எந்த ஒரு நன்மையும் வழங்கவில்லை. அவர் உங்களுடைய ராசிக்கு 3 ராசியான தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சியாகி ஒரு வருடம் கழித்த பிறகு அதாவது 27.12.2021 முதல் உங்களுக்கு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை வழங்க இருக்கிறார்.
‘சனி கொடுத்தால் எவர் தடுப்பார்!!! சனி தடுத்தால் எவர் கொடுப்பார்!!!’ என்ற பழமொழியின் அர்த்தத்தை இந்த வருடத் தொடக்கத்திலேயே உணர்ந்து விடுவீர்கள்.
13.11.2021 அன்று உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குரு பகவான் வருகை தந்தார். இது உங்களுடைய குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை குறிக்கிறது. எனவே இந்த வருடத்தில் 13.4.2022 வரை ஒவ்வொரு மாதமும் அமாவாசை அல்லது வளர்பிறை பஞ்சமி திதியன்று உங்கள் குலதெய்வம் கோயிலுக்கு சென்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் தனித்தனியாக படையல் இடவேண்டும்.
உங்களுடைய நியாயமான கோரிக்கைகள் எது என்பதை உங்கள் குலதெய்வம் சன்னதியில் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்ய வேண்டும். 90 நிமிடங்கள் வரை உங்கள் குலதெய்வம் கோயிலில் இருக்க வேண்டும். அதன் பிறகு நேராக உங்கள் வீட்டுக்கு வந்துவிடவேண்டும். இவ்வாறு 13.4.2022 வரை செய்து வருவதன் மூலமாக இந்த வருடம் உங்களுக்கு முன்னேற்றமும் திருப்பமும் வளர்ச்சியும் தரக்கூடிய வருடமாக மாறிவிடும்.
இந்த வருடம் ஆரம்பத்திலிருந்து உங்களுக்கு கிடைக்கும் வருமானம் அல்லது சம்பளம் உங்களின் மாதாந்திர அத்தியாவசிய தேவைகள் போக மீதியை சேமிக்கும் அளவுக்கு வளர்ச்சி அடையும்.
21.3.2022 அன்று முதல்18 மாதங்களுக்கு உங்களுடைய ராசியில் கேது பகவான் இருக்கிறார். உங்களுடைய ராசிக்கு ஏழாமிடத்தில் ராகு பகவான் வரை இருக்கிறார். எனவே நீங்கள் ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்தியன்று விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும்.
தேய்பிறை தசமி அன்று துர்க்கை அல்லது காளி அல்லது பிரத்யங்கிரா தேவி அல்லது அங்காள பரமேஸ்வரி அல்லது பத்திரகாளி அல்லது மாரியம்மன் போன்ற உக்கிரமான பெண் தெய்வங்களில் ஒருவரை மட்டும் வழிபாடு செய்து கொண்டிருக்க வேண்டும். இதன் மூலமாக அடுத்த 18 மாதங்களுக்கு உங்களுக்கு சர்ப்ப கிரகங்களால் தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும்.
அல்லது நீங்கள் இந்த வருடம் முழுவதும் தினமும் 108 முறை ஜெபிக்க அல்லது எழுதி வேண்டிய பைரவ மந்திரம்:-
‘ஓம் ஹ்ரீம் சம்ஹார பைரவர் நமஹ’
ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
அலைபேசி: +91 9629439499.
இதையும் பாருங்கள்:
தினசரி வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய மந்திர வார்த்தைகள்!
அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!
அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!
ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!
ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!