ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

உலகில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் அதிகபட்சம் மூன்று முறை ஜென்ம சனி காலம் வரும். முதலில் வரும் ஜென்ம சனி காலத்திற்கு மங்கு சனி என்றும் இரண்டாவது வரும் ஜென்ம சனி காலத்திற்கு பொங்கு சனி என்றும் மூன்றாவது வரும் ஜென்மச்சனி காலத்திற்கு மரணச்சனி என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

கலியுகம் செல்லச்செல்ல மனிதர்களுடைய மன உறுதியை சோதிக்கும் விதமான சம்பவங்களை அவர்களுடைய ஜென்ம சனி காலத்தில் சனி பகவான் தருகிறார். ஒருவருக்கு ஏழரைச் சனி என்பது ஏழரை ஆண்டுகள் என்று இருந்தாலும் கூட கடந்த 15 ஆண்டுகளாக சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் 3 ஆண்டுகள் வரை இருக்கிறார். எனவே ஏழரைச் சனி என்பது ஒவ்வொரு ராசிக்கும் 9 ஆண்டுகள் வரை அனுபவிக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது.

ஒருவருக்கு ஏழரைச்சனி முடிந்த மறுநாளே எந்த ஒரு நன்மையும் நடப்பது கிடையாது. ராசிக்கு மூன்றாம் இடத்திற்கு சனி பகவான் வந்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகுதான் (27.12.2020 அன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிந்து விட்டாலும்)அந்த ராசிக்காரர்களுக்கு நிரந்தரமான வேலை அல்லது தொழில் அமைகின்றது. இதில் விதி விலக்குகளும் உண்டு.

யாரெல்லாம் ஏழரைச்சனி காலத்தில் (20.12.2023 வரை தனுசு ராசி) அசைவம் சாப்பிடுவதையும் மது அருந்துவதையும் கை விடுகிறார்களோ அவர்களுக்கு சனி பகவான் பெரிய அளவு துயரங்கள் தருவது கிடையாது. இருந்தபோதிலும் பல்வேறு சூழ்நிலை காரணமாக நிரந்தரமான வேலை அல்லது தொழில் அல்லது வருமான வாய்ப்புக்காக ஏங்கும் ஜென்ம சனி யை அனுபவிக்கும் மனிதர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் திருநறையூர் என்ற ஊருக்கு ஏதாவது ஒரு சனிக்கிழமை செல்ல வேண்டும். அங்கே அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமநாதசுவாமி திருக்கோயில் என்ற கோயிலுக்கு செல்ல வேண்டும். காலை 8 மணி முதல் 10.30 வரை இருக்கவேண்டும்.

இந்த கோயிலில் சனி பகவான் தன்னுடைய குடும்பத்துடன் மங்களம் தரும் சனியாக அருள்பாலித்து வருகிறார். அருள்மிகு மந்தா தேவி அருள்மிகு ஜேஷ்டாதேவி என்ற இரண்டு மனைவிகள் மற்றும் மாந்தி, குளிகன் என்ற 2 மகன்களுடன் மங்கள சனியாக அருள்பாலித்து வருகிறார்.

ஜென்ம சனி மற்றும் அஷ்டமச்சனி உள்ள மனிதர்கள் இந்த கோயிலுக்கு செல்வதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி இருக்க வேண்டும். கண்டிப்பாக மது அருந்துவதை கைவிட்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த கோயிலுக்கு வந்தாலும் ஜென்மச்சனி அல்லது அஷ்டமச்சனியின் துயரங்கள் தொடரத்தான் செய்யும்.

இந்தக் கோயிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 8 மணி முதல் 9 மணி வரை குடும்பத்துடன் இருக்கும் மங்களம் தரும் சனி பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதில் கலந்து கொள்ள வேண்டும். அபிஷேகம் முடிந்த பிறகு அங்கே உள்ள அங்கே இருக்கும் அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமநாத சுவாமி சன்னதியில் மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். கோவிலை விட்டு புறப்படும் பொழுது மங்கள சனிபகவானுக்கு பின்புறம் அமைந்திருக்கும் காலபைரவர் பெருமானிடம் பின்வருமாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் .

“ஓம் ஹ்ரீம் குரோதன பைரவாய நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை ஜெபித்து முடிக்க வேண்டும். இது சனி பகவானுக்கு உரிய பிராண தேவதையாக இருக்கும் குரோதன பைரவர் மந்திரமாகும்.

அதன் பிறகு வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமல் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லாமல் வீடு திரும்ப வேண்டும். இவ்வாறு செய்து விட்டால் அடுத்த ஒரு மண்டலத்திற்கு பிறகு ஜென்மச்சனி சுப சனியாக மாறிவிடும். இருந்தபோதிலும் ஜென்மச் சனி முடியும்வரை (20.12.2023 வரை மகர ராசி)அல்லது அஷ்டமச்சனி முடியும் வரை(20.12.2023 வரை மிதுன ராசி) கண்டிப்பாக அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும். மது அருந்தாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நிரந்தரமான வருமானம் வாய்ப்பு அல்லது வேலை அல்லது தொழில் அமையும்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499

இதையும் படியுங்கள்:

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.