அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

அங்காள பரமேஸ்வரி அருள் பெற:

பின்வரும் பாடலை தினமும் உங்கள் வீட்டில் அதிகாலை அல்லது இரவு நேரத்தில் 108 முறை ஜெபித்து வர வேண்டும்.

மாதம் ஒருமுறை வெள்ளிக்கிழமை அன்று காலை 10 முதல் 12 மணி வரை உங்கள் ஊரில் அல்லது மாவட்டத்திலுள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் இருக்க வேண்டும். அங்கு அன்னையின் சன்னதியில் கிழக்கு நோக்கி அமர்ந்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும்.

அதன் பிறகு உங்களுடைய பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.பூசாரிக்கு கண்டிப்பாக ரூபாய் 108 தட்சணை தர வேண்டும். இவ்வாறு நூத்தி எட்டு மாதங்கள் தொடர்ந்து ஜெபித்து வருவதன் மூலமாக அங்காள பரமேஸ்வரி அன்னையின் திருப்பாத தரிசனம் கிடைப்பதற்கான வழிமுறைகள் தேடிவரும்.

நீங்கள் மிகுந்த புண்ணிய ஆத்மாவாக இருந்தால் 108 வெள்ளிக்கிழமைகளுக்குள் அன்னையின் அருள் கிடைக்கும். விடாமுயற்சி நிச்சயம் உங்களுக்கு நன்மையை தரும்.

மறுபிறவி இல்லாத முக்தியை நினைத்து ஏங்கும் ஒவ்வொருவரும் இந்த பாடலை தினமும் ஜெபிக்கலாம்.

“பாத நினைவே எனக்கென்றும் வேண்டும் வேறு எது நினைவும்

காததூரம் ஓடிட வேண்டும் நின் நினைவு என்றும்

சேதமுறாது செம்மலர் பாத நின் நினைவே வேண்டும்

நின் பாதமே என் பல பிறவி அழிக்க வந்ததே!”

நன்றி:- சத்குரு வேங்கடராம சுவாமிகள்

ஆதாரம்:- ஶ்ரீ அகஸ்திய விஜயம், பக்கம் 20, ஜீன் 2016

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499.

இதையும் பாருங்கள்:

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.