அங்காள பரமேஸ்வரியின் அருளைத் தரும் இடியாப்ப சித்தர் மந்திரம்!

உலகம் உயிர்கள் பிரபஞ்சம் என்று அனைத்தையும் உருவாக்கி ஆட்சி செய்து வருவது முழுமுதற் பரம்பொருள் என்று சொல்லக்கூடிய சிவபெருமான் ஆவார். அவருடைய சக்தியாக இருக்கும் அன்னை பார்வதி தேவியின் முக்கிய அவதாரங்களில் ஒன்று அன்னை அங்காளபரமேஸ்வரி அவதாரம் ஆகும்.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்கள்

தமிழ்நாட்டில் ஏராளமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்கள் உள்ளன. மிகுந்த கருணையும் பாசமும் கொண்டவர் அன்னை அங்காளபரமேஸ்வரி. இவளுடைய அருளைப் பெறுவதற்கு பல்வேறு விதமான வழிமுறைகள் உள்ளன. அதில் மிகவும் எளிமையான வழி ஒன்று உண்டு.

இடியாப்ப சித்தர்

அங்காள பரமேஸ்வரி அடிமை என்று அடிக்கடி சொல்லும் சித்தர் இடியாப்ப சித்தர் ஆவார். இவர் அகத்தியர் பரம்பரையில் உண்டான சித்தர்களில் முக்கியமானவர். பல கோடி வருடங்களாக பெருமுயற்சி எடுத்து அங்காள பரமேஸ்வரியின் ஆன்மீக அருள் மகனாக பரிணமித்தார். இப்போது நம் அனைவருக்கும் சத்குருவாக இருந்து ஆன்மீக வழிகாட்டியாக இருந்து வருகிறார்.

மாதா பிதா குரு தெய்வம் என்பது நம்முடைய தமிழ் ஆன்மீக மொழியாகும். குருவின் அருள் கிடைத்தால்தான் தெய்வத்தின் அருள் கிடைக்கும் என்பது இதற்குரிய விளக்கமாகும். எனவே இடியாப்ப சித்தரின் அனுக்கிரகத்தை பெற்று விட்டாலே அங்காளபரமேஸ்வரி அன்னையின் ஆசீர்வாதத்தையும் அருளையும் முழுமையாகப் பெற முடியும்.

இடியாப்ப சித்தர் மந்திரம்

பின்வரும் இடியாப்ப சித்தர் மந்திரத்தை தினமும் 108 முறை வீட்டில் ஜெபித்து வர வேண்டும்.

“ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்த பரபிரம்ம மகரிஷி மகேஸ்வராய கௌஸ்துப புருஷாய இடியாப்ப சித்த ஈச மஹராஜ் கீ ஜெய்”

ஒவ்வொரு மாதமும் வரும் மாதாந்திர வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை அன்று வரக்கூடிய ராகுகால நேரத்தில் உங்கள் ஊரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்லுங்கள். அங்கு ராகு காலம் ஆரம்பித்தது முதல் ராகு காலம் முடியும் வரை இந்த இடியாப்ப சித்தர் மந்திரத்தை விடாமல் ஜெபித்து வாருங்கள்.

வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் மதியம் 12 மணி வரை ராகு காலம் இருக்கிறது. செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணி முதல் 4 .30மணி வரை ராகு காலம் இருக்கிறது.

இடியாப்ப சித்தரின் தரிசனத்தை பெற விரும்புபவர்கள் சென்னை ராயபுரம் செல்ல வேண்டும். அங்கே உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஒரு தூணில் (புடைப்பு சிற்பமாக) இன்றும் தவம் செய்து கொண்டிருக்கிறார்.

மாதம் ஒரு வெள்ளிக்கிழமை வீதம் தொடர்ந்து 108 வெள்ளிக்கிழமைகள் இவ்வாறு ராகுகால நேரத்தில் இடியாப்ப சித்தர் மந்திரம் ஜெபித்து வர வேண்டும். 108 வெள்ளிக்கிழமைகள் இவ்வாறு செய்து முடித்த பிறகு இடியாப்ப சித்தரின் அனுக்கிரகம் மற்றும் வழிகாட்டுதல் கிடைக்க ஆரம்பிக்கும். தகுந்த ஆன்மீக குரு வேண்டும் என்ற ஏக்கம் உள்ளவர்களும் இந்த முயற்சியில் ஈடுபடலாம்.

மிகவும் பழமையான அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்கள் பல நம்முடைய ஆன்மீக தமிழ்நாட்டில் உள்ளன. அவைகளில் இரண்டு கோவில்களை மட்டும் இங்கே அறிந்து கொள்வோம்.

1. ராயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்

2. விழுப்புரம் அருகில் உள்ள மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில்

இந்த இரண்டு கோயில்களுக்கு அருகில் இல்லாமல் பல்வேறு மாவட்டங்கள் அல்லது வெளிமாநிலங்கள் எனது தொலைதூர நாடுகளில் வசிப்பவர்கள், அவரவர் வசிக்கும் வீட்டு பூஜை அறையில் இதேபோன்று தினமும் 108 முறை இடியாப்ப சித்தர் மந்திரம் ஜெபித்து வரலாம். அப்படி ஜெபம் செய்தாலும் நிச்சயமாக இடியாப்ப சித்தரின் அருளாசி கிடைக்கும்.

நமது தமிழ்நாட்டுக்கு வரும்போது இடியாப்ப சித்தர் உடைய அனுக்கிரகத்தால் ஏதாவது ஒரு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபடக்கூடிய சந்தர்ப்பம் தானாகவே அமைந்து விடும் என்பது உறுதி.

குருவருள் இருந்தால் தான் திருவருள் கிடைக்கும். திரு அருள் என்பது இறை அருள் என்பதே ஆகும்.

ஜோதிடர் வீரமுனி சுவாமிகள்
ராஜபாளையம்.
+91 9629439499.

இதையும் பாருங்கள்:

அத்தனை பிறவிகளையும் தீர்த்து அருளும் அங்காள பரமேஸ்வரியின் திருப்பாத தரிசனம்!

ஜென்மச் சனி காலத்தை சுப சனியாக மாற்றும் மங்கள சனி கோவில்!

ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஜீவசமாதி வழிபாடு! தவறவிடாதீர்கள்!!

உடனடி பலன்கள் தரும் முனீஸ்வரர் வழிபாடு!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.