இவங்க இரட்டை சகோதரிகள் தான்.. ஆனா 10 வயசு வித்தியாசம் இருக்குற தோற்றம்.. மருத்துவர்களையே மிரள வைத்த சம்பவம்..

By Ajith V

Published:

பொதுவாக இரட்டையர்கள் என்றாலே பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பதுடன் மட்டுமில்லாமல் அவர்களது குணாதிசயங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஒரே போல தான் இருக்கும். பெற்றோர்களால் கூட சில நேரங்களில் இரட்டையர்களாக இருப்பவர்களுக்கு இடையே இருக்கும் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது கடினமாக தான் இருக்கும்.

ஆனால் அதையும் தாண்டி அவர்களை தினசரி வாழ்க்கையில் பார்க்கும் பலரும் அவர்களிடம் வேறுபட்டிருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தை கண்டுபிடித்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப அவர்களை அடையாளம் கண்டு கொள்ளவும் செய்வார்கள். அதே வேளையில் இரட்டையர்கள் தொடர்பாக நிறைய செய்திகள் அடிக்கடி இணையத்தில் வலம் வருவதையும் நாம் பார்த்திருப்போம்.

சமீபத்தில் கூட இரட்டையர்களில் ஒருவர் ஆசிய இனத்தை சேர்ந்தவராகவும், இன்னொருவர் வெள்ளை நிற இனத்தை சேர்ந்தவராகவும் இருந்ததும் பெரிய அளவில் வியப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக பின்னர் வெளியான தகவல்களின் படி அந்த இரண்டு பெண்களின் தாயார் இரண்டு ஆண்களுடன் ஒரே நேரத்தில் உறவு வைத்திருந்ததால் ஒரே கருமுட்டையில் உருவாகி அவர்கள் இரட்டையர்களாக மாறி இருந்ததாகவும் தெரிய வந்தது.

அந்த வகையில் தற்போதும் ஒரு இரட்டையர்கள் குறித்து வெளியான தகவல்கள் பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. சூசன் (Susanne) மற்றும் ஜேன் (Jeanne) ஆகிய இரண்டு பேர் இரட்டை சகோதரிகளாக இருந்த நிலையில் அவர்கள் பார்ப்பதற்கு ஒருவர் வயது குறைந்தவராகவும் இன்னொருவர் வயது அதிகமாக உள்ளவராகவும் தோன்றுவது தான் அனைவரையும் குழம்பி போக வைத்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த இரட்டையர்களுக்கு 61 வயதாக இருந்துள்ளது. அப்போது இவர்கள் இருவர் தொடர்பாக நடந்த ஆய்வில் பல்வேறு வியப்பான முடிவுகள் தெரிய வந்துள்ளது. சூசன் மற்றும் ஜேன் ஆகிய இருவருமே வெவ்வேறு வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்த சூழலில், ஜெயின் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இல்லாமல் இருந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அவரது உடல் தோலையும் மிக கவனமாக பார்த்துக் கொண்ட அவர், சூரிய ஒளியில் வலம் வருவதையும் அரிதாகவே வைத்துள்ளார். அவருக்கு 60 வயதை ஒட்டியது போல இருந்தாலும் முகம் மற்றும் சில இடங்கள் 50 வயது போன்ற ஒருவராகவும் காண்பித்துள்ளது.

ஆனால் இன்னொரு பக்கம் அவரது சகோதரியான சூசன் வயது அதிகம் உள்ளவராக மாறுபட்டு இருந்துள்ளார். இதற்கு காரணம் சூசன் 16 வருடங்களாக புகைப் பிடிக்கும் பழக்கத்தை வைத்திருந்ததாகவும், சூரிய ஒளியில் பகலில் அதிக நேரம் நடமாடி வந்ததாகவும் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால் இரட்டை சகோதரிகளில் ஜேனை விட 11 வயது அதிகமான ஒரு உருவம் கொண்டு சூசன் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இரட்டையர்கள் என்றாலே எந்த வித்தியாசமும் இருக்காது என பலரும் குறிப்பிட்டு வரும் நிலையில் புகை பழக்கம் மற்றும் வெயிலில் அதிகம் நடமாடியதால் ஒருவர் பத்து வயது முதிர்ந்தவர் போல் தோன்றும் விஷயம் நிச்சயம் வியப்பான ஒன்றுதான்.

மேலும் உங்களுக்காக...