தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட பெண்.. ஒரு வருடம் கழித்து விவாகரத்து செய்ததன் வினோத பின்னணி..

By Ajith V

Published:

முன்பெல்லாம் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து காதலித்தோ அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமண வாழ்க்கையில் ஈடுபடுவார்கள். ஆனால் மெல்ல மெல்ல அதிலிருந்து மாற்றங்கள் உருவாக ஒரே பாலினத்தவரே மாறி மாறி விருப்பத்தை மேற்கொண்டு வரும் சூழலில் இன்று பல நாடுகளில் அவர்களின் திருமணமும் சட்டபூர்வமாக நடைபெற்று வருகிறது.

ஒரு பக்கம் இதற்கான எதிர்ப்பு அதிகம் இருந்தாலும் இன்னொரு புறம் காதல் என்பது யார் மீதும் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்று கோட்பாடுடன் அதற்கு ஆதரவும் உலக நாடுகள் மத்தியில் அதிகமாக தான் இருந்து வருகிறது. பரந்து கிடக்கும் இந்த உலகத்தில் யாரை வேண்டுமானாலும் நாம் காதலித்து திருமணம் செய்து கொள்வதில் எந்த தவறும் கிடையாது என்று பலர் குறிப்பிட்டு வரும் நிலையில், ஒரே பாலினத்தின் மீது ஈடுபாடுடன் செயல்படுபவர்களும் இங்கே அதிகம் உள்ளனர்.

ஆனால் இதையெல்லாம் தாண்டி இன்னொரு படி மேலே சென்ற பலரும் தங்களை தானே திருமணம் செய்து கொண்டு Sologamy (சோலோகமி) என்ற உறவிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் கூட கடந்த சில வருடங்களுக்கு முன்பாக பெண் ஐடி ஊழியர் ஒருவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்வது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அதிகம் வைரலாகி இருந்தது.

வேறொரு ஆணுடனோ, பெண்ணுடனோ உறவில் இருக்காமல் தன்மீது ஈர்க்கப்பட்டு தன்னையே திருமணம் செய்து கொண்ட இந்த விஷயம் பலர் மத்தியில் வினோதமாக தான் பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அப்படி ஒரு சம்பவம் தொடர்பான செய்தியை தான் பார்க்க போகிறோம்.

பிரேசில் நாட்டில் பிறந்து தற்போது லண்டன் பகுதியில் வாழ்ந்து வருபவர் தான் ஷூலன் கேரி (Suellen Carey). மாடலான இவர், கடந்த ஆண்டு மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியிருந்தார். இவர் லண்டன் பகுதியில் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட சூழலில் இது தொடர்பான பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி இருந்தது.

அதன் பின்னர் தன்னை தானே ரசித்து வாழ்வதற்கு பல முடிவுகளையும் மேற்கொண்டுள்ளார். தனியாக அனைத்து விஷயங்களையும் ரசிப்பதற்காக பல்வேறு தெரபி சிகிச்சைகளையும் மேற்கொண்ட கேரி, அதற்கேற்ப தயாராகி இருந்தார். மேலும் ஒரு ஆண்டாக இந்த சோலோகமி திருமண வாழ்க்கையில் ஈடுபட்ட வந்த கேரி தற்போது அதிலிருந்து வெளியேறி விவாகரத்து செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

இது பற்றி பேசும் அவர் தன்னை பற்றி தெரிந்து கொள்வதும் மிக முக்கியம் என்றாலும் அதில் நமக்கு அதில் நிறைய சவால்கள் இருப்பதாகவும் அது தனக்கு விரக்தியை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். தன்மீதே அதிகமாக நெருக்கடியை உருவாக்குவதால் இந்த உறவிலிருந்து வெளியேற வேண்டும் என்று முடிவு செய்துள்ளார் கேரி.

அதுமட்டுமில்லாமல் இந்த சோலோகமி உறவிலிருந்து வெளியேறி இன்னொருவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஷூலன் கேரி தெரிவித்துள்ளது பற்றி தற்போது பலரும் பலவிதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...