வீடியோ : குலாப் ஜாமூனை புது மாப்பிள்ளைக்கு ஊட்டியதும்.. மறுகணமே அவர் செஞ்ச விஷயம்.. தோனிய விட ஃபாஸ்டு..

Published:

பொதுவாக இந்தியாவில் நடைபெறும் திருமணங்கள் என்பதில் நிறைய சடங்கு முறைகள் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு மாநிலம் என மட்டுமில்லாமல், அதற்குள்ளேயே ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஏற்றபடி திருமணம் நடைபெறும் முறையும், சடங்குகளும் வேறுபட்டு இருக்கும். இதில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெறவும் செய்யும்.

இந்தியாவில் இருக்கும் பலரும் தங்கள் இருக்கும் இடத்தை சுற்றி நடக்கும் திருமண முறைகள் பற்றி தெரிந்து கொண்டாலும் வேறு ஊர்கள் பற்றி தெரிய வரும் போது அவை மிகுந்த ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும். இப்படி திருமண சடங்குகள் ஒரு பக்கம் வியப்பை ஏற்படுத்தும். இன்னொரு பக்கம், திடீரென சிறந்த நாளான திருமண தினத்தில் ஏதாவது எதிர்பாராத சம்பவங்கள் கூட நடந்து அப்படியே அனைத்தையும் தலைகீழாக மாற்றவும் செய்யும்.

இந்தியாவில் நடந்த பல திருமணங்களில் நிறைய நேரங்களில் சண்டை அல்லது மணமக்கள் மத்தியில் திடீரென பிரச்சனைகள் உருவாகி திருமணம் நின்று போன தகவல்களை கூட நாம் நிறைய கேட்டிருப்போம். மணமேடையில் மாப்பிள்ளை குடித்துக் கொண்டு வந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தியதும், மேடைக்கு தாமதமாக மணமகன் வந்ததால், மணப்பெண் திருமணம் வேண்டாம் என்று மறுத்ததும் என நிறைய அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறியதுண்டு.

இதே போல, உணவில் பிடித்த வகைகள் வைக்காமல் போனதால் ஒரு சார்பு வீட்டார் ரகளையில் ஈடுபட்டு அப்படியே திருமணம் நின்று போனதும் கூட அடிக்கடி வலம் வரும் செய்திகள் தான். இப்படி பரபரப்பான சம்பவங்கள் ஒரு பக்கம் இருக்க, தற்போது திருமண நிகழ்வு ஒன்றில் மணமகன் வேடிக்கையாக செய்த விஷயம் ஒன்று பலரையும் சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.

இந்த சம்பவம் எங்கே நடந்தது என்பது தெரியாத சூழலில், இது தொடர்பான வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களை அதிகம் ஆக்கிரமித்துள்ளது. இந்த வீடியோவில் உறவினர்கள் பலரும் சூழ்ந்திருக்க, மணமகன் நடுவே அமர்ந்துள்ளார். அப்போது அவருக்கு இளம்பெண் ஒருவர், குலாப் ஜாமூனை ஊட்டுகிறார்.

முதலில் அந்த மாப்பிள்ளை அதை உண்பதற்கு தயங்கி சில நொடிகள் அப்படியே அசையாமல் இருக்கிறார். சுற்றி இருப்பவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் இருக்க, மறுகணமே கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கரண்டியில் இருந்த குலாப் ஜாமூனை கவ்விப் பிடித்து உண்கிறார். இதனை பார்த்ததும் அங்கிருந்த அனைவருமே சிரிக்கத் தொடங்கி விட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by Antique Karma (@antique.karma)

அந்த மாப்பிள்ளை உண்டதே அப்படி ஒரு வேகத்தில் இருக்க, தோனியின் ஸ்டம்பிங்கை விட வேகமாக இருப்பதாகவும் வேடிக்கையாக கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் இந்த வீடியோவும் தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மேலும் உங்களுக்காக...