இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பதற்றம், ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காம் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலால் ஏற்பட்ட நிலையில் அதன் பின்னர் இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது. இந்நிலையில், பாகிஸ்தான் படைத்தலைவர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய கருத்து மக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பத்திரிகையாளர் சந்திப்பின் ஒரு வீடியோ கிளிப், பாகிஸ்தான் படைத்தலைவர் உதவி இயக்குநர், லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீப் சௌத்ரி, செய்தியாளர்களிடம் பேசியதாவது: “இஸ்லாம் பாகிஸ்தான் ராணுவத்தின் அடிப்படை பகுதி, மற்றும் ‘ஜிஹாத்’ தான் எங்களை இயக்குகிறது.” என்று கூறியுள்ளார்.
இந்தியா எதிராக பாகிஸ்தான் தாக்குதல் செய்யும் முயற்சிகளின் போது பயன்படுத்தப்பட்ட இஸ்லாமிய சொற்களை பற்றி கேள்வி எழுப்பியபோது, சௌத்ரி இந்த பதிலை அளித்தார்,. “இஸ்லாம் பாகிஸ்தான் ராணுவத்தின் நம்பிக்கையின் ஒரு பகுதி. இது நமது தனிப்பட்ட நம்பிக்கைகளில் ஒரு பகுதி அல்ல, நமது பயிற்சியின் ஒரு பகுதி. இது நமது நம்பிக்கையின் ஒரு பகுதி. இமான், தக்க்வா, ஜிஹாத் பி சபிலில்லாஹ் (நம்பிக்கை, பக்தி, இறைவனின் பெயரில் போராடுதல்) இதுவே எங்களை இயக்குகிறது என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பல தடவைகளில் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து, அதை ‘ஜிஹாத்’ என்ற பெயரில் மறைமுகமாக தாக்குதல் நடத்தி வந்த நாடு என்பது இவருடைய பேட்டியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது,