பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு “ஆபரேஷன் சிந்தூர்” குறித்து நாட்டிற்கு உரையாற்ற உள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து ஏற்கனவே மூன்று முறை பிரதமர் மோடி பேசியிருந்தாலும், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக அவர் நாடு முழுவதும் உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும்.
இந்திய ஆயுத படைகள் மே 7ம் தேதி தொடங்கியுள்ள ஆபரேஷன் சிந்தூரை பற்றி, விமானப்படை இயக்கப்பொறுப்பாளர் ஏர்மார்ஷல் ஏ.கே. பாரதி இன்று விளக்கமளித்தார். இது பயங்கரவாதிகளையும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் குழுக்களையும் எதிர்த்து தான் எனவும், பாகிஸ்தான் ராணுவத்தை இலக்காக வைக்கவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இந்திய விமான தாக்குதல்களில் பாகிஸ்தானின் ஆயுதக் களஞ்சியங்கள் அழிக்கப்பட்டதை காட்டும் வீடியோவை அவர் வெளியிட்டார். மேலும், பாகிஸ்தான் ராணுவமே தங்களை தாங்களே இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தி கொண்டதாகவும், அதனால் ஏற்படும் இழப்புக்கு அவர்கள் தான் பொறுப்பு என்றும் கூறினார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு புரிந்துணர்வை தொடர்ந்து, இரு நாடுகளின் ராணுவ இயக்கத் தலைமை அதிகாரிகள் இன்று மாலை 5 மணிக்கு கலந்துரையாட உள்ளனர்.
இதற்கிடையில் இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றும்போது எதிர்பாராத ட்விஸ்ட் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.