உயிரிழந்து 45 நிமிடம் கழித்து.. மீண்டும் உயிருடன் திரும்ப வந்த நபர்.. அந்த நேரத்துல நடந்தது எல்லாம்.. மிரட்டலான தகவல்..

Published:

இந்த உலகில் ஒருவர் இறந்து விட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பதே இன்று வரையில் அவிழ்த்து பார்க்க முடியாத மர்ம முடிச்சாகவே உள்ளது. பேய், ஆவிகள், ஆத்மா என பல விஷயங்கள் இருந்தாலும் இதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. ஒருவர் இந்த உலகை விட்டு பிரியும் போது அவர்கள் ஆசை நிறைவேறாத சூழலில், இங்கே அவர்களின் ஆத்மா சுற்றிக் கொண்டிருக்கும் என்றும், பேயாக கூட வரலாம் என்றும் நிறைய பேர் நம்பி வருகின்றனர்.

ஆனால், இன்னொரு பக்கம் அப்படி எதுவும் கிடையாது என்றும், இறந்தால் அத்துடன் ஒருவரின் வாழ்க்கை முடிந்து விடும் என்றும் சொல்லக் கூடியவர்கள் ஏராளம். அப்படி இருக்கையில், இறந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் ஒருவர், 45 நிமிடங்கள் கழித்து மீண்டும் உயிருடன் திரும்பி வர அதற்கு நடுவே நடந்ததாக அவர் கூறிய விஷயங்கள் தான் பலரையும் ஒரு நிமிடம் அச்சப்பட வைத்துள்ளது.

வின்சென்ட் டால்மன் (Vincent Tolman) என்ற நபர் ஒருவர் அதிகமாக பாடி பில்டிங் பவுடரை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால், திடீரென வாந்தி எடுத்து சுயநினைவை வின்சென்ட் இழந்ததாக கூறப்படும் நிலையில், அவர் இறந்து விட்டதாக உடல்களை வைக்கும் பையிலும் வைத்துள்ளனர்.

அந்த சமயத்தில், நடந்த சில சம்பவங்கள் குறித்து வின்சென்ட் சொல்லும் விஷயங்கள் தான் அனைவரையும் சில்லிட வைத்துள்ளது. அப்போது Drake என்ற உருவம் தன்னை எங்கோ அழைத்து சென்றதாகவும், அவரது வாழ்க்கையில் செய்த தவறுகளை எல்லாம் மீண்டும் ஒருமுறை நினைவுகூர வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலகம் என்பது ஒரு பள்ளிக்கூடம் என்பதையும் அதன் மூலம் உணர்ந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், சிறுவயது முதல் தான் செய்த தவறுகளை தனது கண் வழியே பார்த்து தன்னையே வெறுத்ததாகவும் வின்சென்ட் குறிப்பிட்டுள்ளார். இதே போல, சூரியன் போன்று ஒரு ஒளி வந்த பின்னர் தான் செய்த நல்ல காரியங்களையும் பார்த்துள்ளார்.

அவரை அழைத்து சென்ற Drake என்ற நபரை பார்த்து நீங்கள் கடவுளா என வின்சென்ட் கேட்டதாகவும், அவரோ கடவுள் இல்லை என மறுத்ததுடன் நான் உனது வழிகாட்டி என்றும் கூறியுள்ளதாம். தொடர்ந்து, தனது இழப்பால் அவரது குடும்பத்தினர் என்ன ஆவார்கள் என்பதை நினைத்து பார்த்து மீண்டும் உயிர் பெற வேண்டுமென வின்சென்ட் விரும்பி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

இதனிடையே, மீண்டும் அவர் உயிர்பெற 3 நாட்கள் கோமாவில் இருந்ததாக கூறப்படுகிறது. 45 நிமிடங்கள் இறந்து போய் மீண்டும் உயிர் பெற்றது பற்றி பேசும் வின்சென்ட், இறப்பு என்பது எளிதாக இருந்ததாகவும், அதை விட மீண்டும் உயிருடன் வர வேண்டும் என எடுத்த முடிவு தான் கடினமாக இருந்ததாகவும் வின்சென்ட் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உங்களுக்காக...