இன்று முதல் பிளிப்கார்ட் கோட் சேல்ஸ் சலுகை விலை.. அமேசானுக்கு போட்டியா?

Published:

அமேசானுக்கு போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனம் இன்று முதல் கோட் சலுகை விலையை அறிவித்துள்ள நிலையில் ஏராளமான மக்கள் இந்த சலுகையை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இன்று முதல் ஜூலை 25ஆம் தேதி வரை கோட் சேல்ஸ் என்ற சலுகை விலையை பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இதில் என்னென்ன சலுகை இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

அனைத்து விதமான பர்சேஸ்களுக்கு 5000 ரூபாய்க்கு பத்து சதவீதம் சலுகை விலை என ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிஎப்சி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே அந்தந்த பொருட்களுக்கு இருக்கும் சலுகை விலை போக இது கூடுதல் சலுகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிளிப்கார்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு இருந்தால் கூடுதலாக 5% கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும்.

இந்த கோட் சேல்ஸில் ஐபோன்கள், கேலக்ஸி போன்கள், நத்திங் போன்கள், கூகுள் பிக்சல் போன்கள் ஆகியவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நத்திங் போன் 2ஏ மாடல் 19,999 ரூபாய் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படும் என பிளிப்கார்ட் இணையதளம் அறிவித்துள்ளது.

அதேபோல் கூகுள் பிக்சல் 7 ஸ்மார்ட்போன்  ரூ.32,999 விலைக்கும் பிக்சல் 8 ரூ.47,999 விலைக்கும் கிடைக்கும். மேலும் பட்ஜெட் ஸ்மார்ட்போனிலும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Moto G34 என்ற மாடலின் விலை  ரூ. 9,999 என்றும், மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் மற்றும் எட்ஜ் 50 ப்ரோ ஆகியவை  ரூ.20,999 மற்றும் ரூ.27,999 விலையில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உங்களுக்காக...