6 மணி நேரத்தில் ஒரு ரயில்வே ஸ்டேஷன்.. இரவு கடைசி ரயில் சென்றதும் ஆரம்பம்.. காலை முதல் ரயில் வருவதற்குள் முடிந்தது..

  மேற்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம், ஜப்பானில் மிகப் பெரிய ரயில்வே நிறுவனமாக இருக்கிறது. கடந்த மாத இறுதியில், அவர்கள் 3D Printed தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய ரயில் நிலையத்தை அறிமுகப்படுத்தியது. இது…

railway station

 

மேற்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம், ஜப்பானில் மிகப் பெரிய ரயில்வே நிறுவனமாக இருக்கிறது. கடந்த மாத இறுதியில், அவர்கள் 3D Printed தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய ரயில் நிலையத்தை அறிமுகப்படுத்தியது. இது உலகத்தில் முதன்முதலாக நிகழ்ந்த முயற்சி என இந்நிறுவனம் தெரிவித்தது. அரிதா நகரில் அமைந்துள்ள இந்த புதிய நிலையத்தை புதுப்பிக்க, அதற்கான பகுதிகள் வேறு இடத்தில் 3D அச்சடிக்கப்பட்டு, ஆறு மணிநேரத்துக்குள் ஒன்றாக சேர்க்கப்பட்டன. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

1948-ல் பழைய மரத்தால் கட்டப்பட்ட Hatsushima ஸ்டேஷன் கட்டிடத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டது. 2018-ஆம் ஆண்டிலிருந்து, இந்த ரயில் நிலையம் மற்ற ஜப்பானிய சிறிய நிலையங்களைப் போன்று தானியங்கி முறைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு 1 முதல் 3 ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தினமும் சுமார் 530 பயணிகள் இங்கு பயணம் செய்கிறார்கள்.

West Japan Railway நிறுவனம், Serendix என்ற கட்டுமான நிறுவனத்திடம் புதிய நிலைய கட்டுமான பணிகளை ஒப்படைத்தது. Serendix 3D Printed பகுதிகளை வேறு இடத்தில் அச்சடித்து, கான்கிரீட் கொண்டு பலப்படுத்துவதற்கு ஏழு நாட்கள் மட்டுமே ஆனது.

அச்சிடும் பணி க்யூஷு தீவில் உள்ள குமமோட்டோ மாகாணத்திலுள்ள ஒரு தொழிற்சாலையில் நடைபெற்றது. பாகங்கள் மார்ச் 24ஆம் தேதி காலை, 804 கி.மீ தூரத்திற்கு Hatsushima ஸ்டேஷனுக்கு லாரிகளில் அனுப்பப்பட்டன.

சாதாரணமாக இந்த பணிகளை முடிக்க ஒருசில மாதங்கள் எடுக்கும் நிலையில் இந்த ரயில் நிலையத்தில் அந்த பணி சில மணி நேரத்தில் முடிந்தது. மார்ச் மாத இறுதியில், செவ்வாய்க்கிழமை இரவு 3D அச்சடிக்கப்பட்ட பகுதிகள் லாரிகளில் வந்து சேர்ந்தன. லாரிகள் திரும்பி சென்றதும் தொழிலாளர்கள் பணியை தொடங்கினர். ஆறு மணி நேரத்திற்குள், முன்பே தயாரிக்கப்பட்ட பாகங்கள் கிரேன் உதவியுடன் ஒன்றாக இணைக்கப்பட்டன. பழைய நிலையத்துக்கு பக்கத்திலேயே புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட்டது.

புதிய ஸ்டேஷன் 100 சதுர அடிக்கு மேல் அளவுள்ளது. முதல் ரயில் காலை ரயில் 5:45 மணிக்கு வருவதற்குள், கட்டுமானம் முடிந்துவிட்டது. இனி உள்ளலங்கார பணிகள், டிக்கெட் மெஷின் மற்றும் கார்டு ரீடர்கள் போன்றவைகளை நிறுவவேண்டும்.

ஜப்பானில் மக்கள் தொகை சில வருடங்களாக அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி ஊழியர்களின் எண்ணிக்கையும் இன்னொரு பக்கம் குறைந்து வருகிறது. அதனால் பழைய ரயில் நிலைய கட்டிடங்களை பராமரிப்பது பெரிய சவாலாக மாறியுள்ளது. எனவே தான் இந்த 3D Printed ஸ்டேஷன் குறைவான நேரத்தில் கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.