29 வயதான மணிகண்டன், ஒரு தினசரி கூலி தொழிலாளி. எப்போதும் நண்பர்களுடன் சேர்ந்து கையால் மீன் பிடிப்பதில் நிபுணராக இருந்த இவர், சம்பவ நாளில் மட்டும் தனியாகவே ஏரிக்குள் மீன்களை பிடிக்க இறங்கினார். இரு மீன்களை அவர் கையால் பிடித்தபோது, ஒன்றை தற்காலிகமாக பற்களால் அடித்து கொண்டு, மற்றொன்றை பிடிக்க முயன்றார்.
அப்போது வாய் உள்ளே இருந்த மீன், திடீரென துள்ளி குதித்து அவரது windpipe-இல் சிக்கிக்கொண்டது. மூச்சுத் திணறலால் பதற்றமடைந்த மணிகண்டன், வெளியே ஓடி வந்து மீனை அகற்ற முயன்றார். பிறகு வீட்டிற்கு ஓட முயன்றபோது வழியில் மயங்கி விழுந்தார் .
அப்பகுதியினர் இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரது தொண்டையில் சிக்கிய மீனை அகற்ற முயன்றபோது, அது ‘பனங்கொட்டை’ என அழைக்கப்படும் ஒரு வளைந்த பின்கள் கொண்ட மீன் என்பது தெரியவந்தது. அதன் கூரிய இறக்கைகள் windpipe-இல் ஆழமாக நுழைந்திருந்ததால் அதை எடுக்க முடியவில்லை. பின்னர், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு வந்தவுடனேயே மருத்துவர்கள் மரணமடைந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதே போன்று, 2022-ல் தாய்லாந்தில் ஒரு மீனவர் மீது, நீரிலிருந்து ஒரு மீன் குதித்து வாயில் நுழைந்து, windpipe-இல் சிக்கியது. அந்த மீனும் ஒரு கூரிய Anabas வகை மீன். அந்த நபரின் மூச்சுவழி மற்றும் மூக்குக்குழாய்க்கும் இடையில் மீன் சிக்கியிருப்பது X-ray மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
மீனை அகற்ற மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது ஏற்பட்டது. “இதுபோன்ற சம்பவம் நேர்படும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. இது போன்றது இதுவரை நான் பார்த்ததே இல்லை” என அந்த மருத்துவமனை அதிகாரி Sermsri Pathompanichrat தெரிவித்துள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் மீன்பிடிக்கும் போது எவ்வளவு பாதுகாப்பு அவசியம் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.