கொசுக்களை பிடித்து கொடுத்தால் காசு… பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த வினோத சம்பவம்…

ஒவ்வொரு நாளும் உலகத்தில் பல அதிசயமான வினோதமான நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு சில நிகழ்வுகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். ஒரு சில நிகழ்வுகள் நம்மை எரிச்சல் அடைய செய்யும். அந்த வகையில்…

mosquito

ஒவ்வொரு நாளும் உலகத்தில் பல அதிசயமான வினோதமான நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு சில நிகழ்வுகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கும். ஒரு சில நிகழ்வுகள் நம்மை எரிச்சல் அடைய செய்யும். அந்த வகையில் தற்போது ஒரு வினோதமான சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்திருக்கிறது. அது என்னவென்றால் கொசுக்களை பிடித்துக் கொடுத்தால் சன்மானம் வழங்குவதாக ஒரு ஊரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதை பற்றி இனி காண்போம்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மண்டலியோங் நகருக்கு உட்பட்ட அடிஷன் மலை கிராமத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்டு 2 மாணவர்கள் உயிரிழந்து இருக்கின்றனர். இந்த நோயினால் பாதிக்கப்பட்டு அதிகப்படியானோர் அன்றாடம் மருத்துவமனையில் அனுமதித்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்நிலையில் அந்த மலை கிராமத்தில் டெங்கு அதிகமாக பரவி வருவதால் அந்த கிராமத்தின் தலைவர் டெங்குவை ஒழிப்பதற்காக புதிய முயற்சியை செய்துள்ளார். அது என்னவென்றால் ஒவ்வொரு நபரும் ஐந்து கொசுக்களை பிடித்துக் கொண்டு வந்து தந்தால் இந்திய ரூபாயில் ஒரு ரூபாய் 50 காசுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதைக் கேட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்து கொத்துக்கொத்தாக கொசுக்களை பிடித்து அதற்கான சன்மானத்தை வாங்குவதற்காக அவரது வீட்டிற்கு படையெடுக்கின்றனர்.

ஆனால் அவரது இந்த ஐடியாவானது வேலை செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். பணத்திற்கு ஆசைப்பட்டு பலர் வீட்டிலேயே கொசுக்களை வளர்க்கவும் ஆரம்பித்து விட்டார்களாம். இதனால் டெங்குவை ஒழிக்க வேண்டும் என்று அவர் செய்த யுக்தி ஆனது மூட்டை பூச்சியை ஒழிக்க வீட்டை கொளுத்துவது போல் ஆனது என்பது போல் ஆகிவிட்டது. தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் அந்த கிராமத்தின் தலைவர் விழித்துக் கொண்டு இருக்கிறாராம்.