உங்களை ஆரோக்கியமாக வைத்துகொள்ள தினமும் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டிய காய்கறிகள் இதுதான்… நோட் பண்ணிக்கோங்க…

இன்றைய காலக்கட்டத்தில் நம் உடம்பை கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் புதுப்புது நோய்கள் அன்றாடம் வந்து கொண்டிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு குறைவாகவே…

veggies

இன்றைய காலக்கட்டத்தில் நம் உடம்பை கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஏனென்றால் புதுப்புது நோய்கள் அன்றாடம் வந்து கொண்டிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு குறைவாகவே இருக்கிறது. இளைஞர்களும் பாஸ்ட் புட் மோகத்தால் உடல் நலனில் அக்கறை கொள்வதில்லை.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது போல் நம் உடல் நலன் நன்றாக இருந்தால்தான் நம் வாழ்நாளை சந்தோஷமாக கழிக்க முடியும். அப்படி நீங்கள் ஆரோக்கியமாக எப்போதும் இருக்க வேண்டும் என்றால் பின்வரும் காய்கறிகளை உங்களது அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். அப்படி நீங்கள் எடுத்துக் கொள்ளும்போது உங்கள் உடல் புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தினமும் உங்களுடைய உணவுகளில் கீரை கட்டாயமாக சேர்த்துக் கொள்ளுங்கள். கீரை வகைகளில் உடலுக்கு பலன் தரக்கூடிய பல ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. மேலும் பல வித நோய்கள் வராமல் தடுப்பதற்கு கீரை உதவுகிறது.

அடுத்ததாக கேரட், பிரக்கோலி. கேரட் கண்பார்வையை தெளிவு படுத்துகிறது. பிரக்கோலியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் உள்ளுறுப்புகளை சீராக இயங்குவதற்கு உதவுகிறது. இது தவிர நட்ஸ்கள் தினமும் ஒரு பழம் வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும்போது நீங்கள் ஆரோக்கியமாக நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழலாம்.