கர்ப்பிணி வயிற்றில் உள்ள சிசுவை ‘குப்பை’ என கூறிய டாக்டர்.. அலட்சியத்தால் வயிற்றிலேயே இறந்த சிசு.. சிதைந்தது ஒரு தாயின் கனவு..

  ஹாலந்து நாட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண் கர்ப்பிணியாக இருந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக அவரது பச்சிளம்பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பெண்ணின் பல மாத தாயாகும் கனவு…

baby 2

 

ஹாலந்து நாட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண் கர்ப்பிணியாக இருந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் காரணமாக அவரது பச்சிளம்பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பெண்ணின் பல மாத தாயாகும் கனவு சிதைந்துள்ளது.

ஹாலந்து நாட்டில் உள்ள கென்ட் என்ற பகுதியை சேர்ந்த 20 வயது அப்பியின் கர்ப்பம் 24 வாரங்களை நெருங்கிய நிலையில், திடீரென கடுமையான வயிற்று வலியும், பனிக்குடம் உடைந்து நீர் கசிய தொடங்கியது. உடனடியாக அவர் மெட்வே மரிடைம் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கிருந்து, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு கொண்ட அருகிலுள்ள செல்சியா மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.

அங்குச் சென்றதும், ஒரு நிபுணர், “இவ்வளவு சிறிய குழந்தையை காப்பாற்ற வாய்ப்பில்லை” என்று அலட்சியமாக கூறியதுடன், அப்பியின் பிறக்காத மகளை “குப்பை” என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனை ஆரம்பத்தில் குழந்தையை காப்பாற்ற முயற்சிப்பதாக கூறியபோதிலும், அப்பி சுமார் 12 மணி நேரம் ஒரு அறையில் தனியாக விடப்பட்டார். அவரது தாயார் மீண்டும் மீண்டும் மருத்துவ உதவி கோரியும், “இது சாதாரண வலிதான்” என்று ஊழியர்கள் அலட்சியமாக பதிலளித்தனர்.

இந்த காலகட்டத்தில், அப்பியின் கருப்பை உறை பிரிந்து அதிக இரத்தக்கசிவு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அவர் மயங்கியும்கூட விழுந்தார். பின்னர்தான் ஒரு செவிலியர் மாணவி வந்து பார்த்தபோது, குழந்தையின் இதயத்துடிப்பு நின்றுவிட்டதை கண்டறிந்தார். இதை தொடர்ந்து, அப்பி பிரசவ அறைக்கு மாற்றப்பட்டு, ஸ்கேன் மூலம் குழந்தையின் இறப்பு உறுதி செய்யப்பட்டது. வேறு வழியின்றி, அவர் தனது உயிரற்ற குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய துயரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு, அப்பியின் வீட்டிற்கு வந்த ஒரு செவிலியர், குழந்தையின் இறப்பு பற்றி அறிந்துகொண்டதும், மருத்துவமனையின் அலட்சியத்தை உறுதிப்படுத்தியதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கவும் அப்பியை அறிவுறுத்தினார்.

உடற்கூறு பரிசோதனையில், குழந்தைக்கு எந்த மரபணு குறைபாடுகளும் இல்லை என்றும், தாயின் கருப்பை உறை ஆரோக்கியமாக இருந்ததும் தெரிய வந்தது. அப்பியின் முறையான புகாருக்கு பிறகு, மருத்துவமனை மன்னிப்பு கோரியதுடன், இந்த சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளது. இருப்பினும், அப்பியின் துயரம் இன்னும் நீங்கவில்லை. தனக்கு கிடைத்த மருத்துவ பராமரிப்பு முற்றிலும் மோசமானது என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.