ஒரு பக்கம் ஏஐ டெக்னாலஜியின் மிகப்பெரிய வளர்ச்சி, இன்னொரு பக்கம் வேலையில்லா திண்டாட்டம் பெருகுவது ஆகியவை குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் கடைசி வரை பொழப்பை ஓடிடி விடலாம் என்று நினைத்தவர்களுக்கு மண்ணை அள்ளி போடுவது போல் தற்போது திடீர் திடீரென கூகுள் நிறுவனமும் வேலை நீக்கம் செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது மீண்டும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டிருப்பதால் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒருவித அச்சத்துடனே வேலை பார்த்து வருகின்றனர்
கூகுள், தனது Platforms and Devices பிரிவிலிருந்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த பிரிவில் Android, Pixel ஸ்மார்ட்போன்கள் மற்றும் Chrome பிரௌசர் தொடர்பான குழுக்கள் பணியாற்றுகின்றன. இந்த நடவடிக்கை, 2025 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்ட சுய விருப்ப ஓய்வு திட்டத்திற்கு பிறகு எடுக்கப்பட்டுள்ளது.
கூகுள், கடந்த ஆண்டு தனது platforms மற்றும் devices குழுக்களை ஒன்றிணைத்ததை அடுத்து, செயல் திறன் மேம்பாட்டிற்கான ஒரு முக்கிய கட்டமாகவே இந்த வேலை force கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வேலை நீக்கம் குறித்து கூகுள் வெளிப்படையாக அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. எனினும், கடந்த பிப்ரவரி 2025இல் கிளவுட் தொழில்நுட்ப பிரிவிலும் சில பணியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இது கூகுளில் நடைபெறும் முதல் பெரிய வேலை force கட்டுப்பாடுகள் அல்ல. ஏற்கனவே, 2023 ஜனவரியில், நிறுவனம் 12,000 ஊழியர்களை நீக்கி, உலகளாவிய ஊழியர்களின் 6%ஐ குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.