ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின் பங்குகள் சரிந்ததைத் தொடர்ந்து இந்நிறுவனம் உலகின் மதிப்பு மிகுந்த நிறுவனம் பட்டியலில் முதலிடத்தை இழந்தது. அந்த வகையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மீண்டும் உலகின் மதிப்புமிக்க பொது நிறுவனம் என்ற பட்டத்தை கைப்பற்றியுள்ளது.
கடந்த நான்கு வர்த்தக நாட்களில் ஆப்பிள் பங்குகள் 23% குறைந்து, அதன் மொத்த சந்தை மதிப்பு $2.59 டிரிலியனாகக் குறைந்துள்ளது. இதே நேரத்தில் மைக்ரோசாஃப்ட் $2.64 டிரிலியனாக உயர்ந்துள்ளது.
இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி திட்டம் தான். உலகளவில் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அமெரிக்கா சுங்க வரி விதிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன், நாஸ்டாக் குறியீடு கடந்த வாரம் மட்டும் 13% சரிந்துள்ளது.
ஆப்பிளின் உற்பத்தி மற்றும் விற்பனைச் சார் நடவடிக்கைகள் சீனாவைச் சார்ந்திருப்பது இச்சரிவுக்கு முக்கியக் காரணமாகும். மைக்ரோசாஃப்ட் பங்கு மதிப்பும் $3 டிரிலியன் என குறைந்திருந்தாலும், இது ஆப்பிளைவிட வரி தாக்கங்களுக்கு குறைவாக பாதிக்கப்பை சந்தித்துள்ளது.
இந்நிறுவனம் தனது பலதரப்பட்ட மென்பொருள் சேவைகள், கிளவுட் சேவைகள் மற்றும் வணிகத் தீர்வுகள் ஆகியவற்றால், பாதுகாப்பான முதலீடு என விநியோகம் சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், நிவிடியா ஆகிய மூன்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் $3 டிரிலியனைத் தாண்டிய நிறுவனங்களாக இருந்தன. ஆனால் தற்போது சந்தை சூழ்நிலை வேகமாக மாறி வரும் நிலையில், “உலகின் மதிப்புமிக்க நிறுவனம்” என்ற பட்டம் எப்போது யாரிடம் போய் சேரும் என்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்போதைக்கு முதலிடத்தில் மைக்ரோசாப்ட் இருந்தாலும் அடுத்த நாள் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.