கவலையடைந்த சாங் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்தனர். ஆனால், அவருக்கும் மருத்துவக் குழுவினருக்கும் ஆச்சரியமாக, எந்த வெளிப் பொருளும் எக்ஸ்ரேவில் தெரியவில்லை. முள்ளின் தடயமே இல்லாததால், ஆபத்து நீங்கிவிட்டதாக கருதி சாங் வீடு திரும்பினார். ஆனால், வலி தொடர்ந்தது. இதனல் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றும், தெளிவான நோயறிதல் இல்லாததால், தொண்டை பகுதியில் அசௌகரியமும், வீக்கமும் அவரை தொடர்ந்து தொந்தரவு செய்தன. தைராய்டு பிரச்சனை இருக்கலாம் என்று சந்தேகித்து, இரண்டாவது முறையாக மருத்துவர்களை அணுகினார். அப்போதும் வலி நிவாரணிகளும், நிச்சயமற்ற பதில்களும் தான் கிடைத்தன.
இந்த நிலையில் தான் திடீரென சாங் தனது தொண்டையில் வலியை போக்க மருந்து தடவிய போது, அவரது தோலை துளைத்துக்கொண்டு ஏதோ ஒன்று வெளியே வருவதை கவனித்தார். உன்னிப்பாக பார்த்தபோது, கூர்மையான, வெள்ளையான, முள் என தெரிய வந்தது. முள் முனை கழுத்தின் பக்கவாட்டில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தது. அவர் மென்மையாக அழுத்தம் கொடுக்க, அவரது திகில் மற்றும் வியப்புக்கிடையே, ஒரு கூர்மையான பொருள் உள்ளிருந்து வெளியேற தொடங்கியது.
அவரது கணவர் இந்த ஆச்சரியமான காட்சியை படம் பிடித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். தனது பதிவில், மீன் சாப்பிடும் போது கவனமாக இருக்குமாறு மற்றவர்களுக்கு அவர் எச்சரித்தார். இதுபோன்ற விபத்துக்கள் எவ்வளவு எளிதாக கவனிக்கப்படாமல் போகலாம் என்பதையும், அதன் விளைவுகள் எவ்வளவு நீண்ட காலம் நீடிக்கும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த தம்பதியினர் மூன்றாவது முறையாக மருத்துவமனைக்கு விரைந்த போது, மருத்துவர்கள் இறுதியாக அவரது தோலின் அடியில் இருந்து இரண்டு சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு மீன் முள்ளை அகற்றினர். இந்த சம்பவம் குறித்து அறுவை சிகிச்சை குழுவினர் மிகுந்த வியப்பை வெளிப்படுத்தினர். இதுபோன்ற ஒரு சம்பவத்தை இதற்கு முன் தாங்கள் கண்டதே இல்லை என்று ஒப்புக்கொண்டனர்.
மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், சிறிய மீன் முட்கள் பெரும்பாலும் செரிமான மண்டலத்தின் வழியாக எந்த தீங்கும் இன்றி வெளியேறிவிடும் அல்லது இயற்கையாகவே வெளியேறிவிடும். ஆனால், அரிதான சில சமயங்களில் அவை மென்மையான திசுக்கள் வழியாக பயணித்து இதுபோன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்கின்றனர்.