சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்களில் #BoycottUSA என்ற ஹேஷ்டேக் மிகவும் தீவிரம் அடைந்து வருகின்றன. அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் பொருட்களை தவிர்க்க பலர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதனால் உலகையே நாட்டாமை செய்த வல்லரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
“Tesla Take-down” என்ற பெயரில், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவில் Tesla கார்கள் தீயிடப்பட்டுள்ளன. எலான் மஸ்க் மற்றும் டிரம்ப் ஆகிய இருவரும் மீதும் உலகளாவிய கோபம் பிரதிபலிக்கிறது.
கனடாவில், “Maple Scan” என்ற ஆப் மூலம் பொருட்கள் அமெரிக்க உரிமையா இல்லையா என அறிந்து மக்கள் பொருட்களை வாங்குகின்றனர். டென்மார்க் நாட்டில் Non-US பொருட்களை அடையாளம் காண உதவிகள் சமூக வலைத்தளங்கள் மூலம் கேட்கப்படுகிறது.
பல லோகல் பிராண்டுகள் அமெரிக்க நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும், இனிமேல் அமெரிக்க பொருட்களை புறக்கணித்து உள்ளூர் பிராண்டுகளுக்கு ஆதரவு கொடுப்போம் என வெளிப்படையாக மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர். இதுவரை அமெரிக்கா தான் பிற நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கும், ஆனால் இப்போது உலக நாடுகளின் பொதுமக்கள் முதல்முறையாக அமெரிக்காவுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் அதே நேரத்தில் அமெரிக்காவை முழுமையான புறக்கணிப்பது என்பது சாத்தியமா? என்ற கேள்வியை பொருளாதார வல்லுனர்கள் எழுப்பி வருகினறனர்.
Visa, Mastercard, Apple Pay, Worldpay போன்றன அமெரிக்க நிறுவனங்களின் சேவையை பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க முடியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் Budweiser, Starbucks, Coca-Cola போன்றவை மிக எளிதாக புறக்கணிக்கப்படும் என்றும், அமெரிக்காவின் அத்தியாவசியம் இல்லாத பொருட்களை எளிதில் புறக்கணிக்கலாம் என்றும் பேசப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் ‘Liberation Day’ என்ற வார்த்தைகள் அமெரிக்காவின் வலிமையை வெளிப்படுத்தும் முயற்சியாக இருந்தாலும், இது எதிர்வினையாக அமெரிக்க நிறுவனங்களுக்கு உலகளாவிய அளவில் நுகர்வோர் எதிர்ப்பை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும்.