புதிய Haier Gravity Series AC-களின் முக்கிய அம்சம் பயனரின் பழக்கங்களுக்கு ஏற்ப தானாக குளிர்ச்சியை மாற்றியமைக்கும் திறன் தான். AI தொழில்நுட்பம் மூலம், AC உள்ளே மற்றும் வெளியே உள்ள வெப்ப நிலைகளை கணிக்க முடியும், மேலும் அதற்கேற்ப சிறந்த வெப்பநிலையை தானாகவே தேர்வு செய்யும்.
AI மூலம் வெப்பநிலையை தானாகவே மாற்றும் திறன் இருந்தாலும், இந்த மாடலில் ஏழு மானுவல் குளிரூட்டும் முறைகள் வழங்கப்படுகின்றன.
Haier கூற்றின்படி புதிய AC-களில் உள்ள AI Electricity Monitoring அம்சம் மூலம் HaiSmart app வழியாக நேரடி மின் பயன்பாடு கண்காணிக்க முடியும்.
இந்த செயலி, மணி, நாள்தோறும், வாரம் மற்றும் மாதம் அடிப்படையில் மின்சாரம் எவ்வளவு செலவாகியுள்ளது என்பதை விரிவாக காண்பிக்கிறது. பயனர்கள் energy goal அமைத்து, அலெர்ட்களுடன் மின் நுகர்வை கட்டுப்படுத்த முடியும்.
மேலும், AI ECO Mode எனப்படும் முறை, AI சார்ந்த அல்காரிதங்களை பயன்படுத்தி அறையை துல்லியமாக குளிர வைக்கிறது. இது மின் நுகர்வையும் குறைக்கும் என Haier தெரிவிக்கிறது.
மேலும் புதிய AC-க்களில் Supersonic Cooling தொழில்நுட்பம் உள்ளது. இது 10 விநாடிகளில் குளிரூட்டும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது, அதற்காக High-Frequency Pulse Control பயன்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி இதில் Frost Self-Clean Technology உள்ளதால் இதன் மூலம், 21 நிமிடங்களில் 99.9% தானாக சுத்தம் செய்யப்படுகிறது.
இந்த AC-க்களில் Full DC Inverter, Dual DC Compressor, மற்றும் Electronic Expansion Valve ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன, இதனால் வெப்பநிலையை மிக துல்லியமாக பராமரிக்க முடியும்.
இந்த புதிய ஏ.சி. தொடர் மொத்தம் 7 மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. விலைகள் ₹51,990 முதல் தொடங்குகின்றன. இந்த ஏ.சி.கள் Haier-இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம், ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மற்றும் முக்கிய ரீடெய்ல் கடைகளில் கிடைக்கும்.