69 வயதில் மனுஷன் வாழ்றான்யா.. ஜெஃப் பெசோஸ் திருமணத்தில் காதலியுடன் வந்த பில்கேட்ஸ்..

  ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு விருந்தில், பில் கேட்ஸ் தனது காதலி பவுலா ஹர்ட்டுடன் கைகோர்த்து வந்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மைக்ரோசாஃப்ட்டின் இணை…

bill gates

 

ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய வரவேற்பு விருந்தில், பில் கேட்ஸ் தனது காதலி பவுலா ஹர்ட்டுடன் கைகோர்த்து வந்த காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மைக்ரோசாஃப்ட்டின் இணை நிறுவனரான பில் கேட்ஸ் மற்றும் அவரது காதலி பவுலா ஹர்ட், நேற்று நடைபெற்ற ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் ஆகியோரின் ஆடம்பரமான திருமண வரவேற்பு விருந்திற்கு வந்தபோது புகைப்பட கலைஞர்களால் படம் பிடிக்கப்பட்டனர்.

பில்கேட்ஸ் வழக்கம் போல் ஒரு கருப்பு நிற சூட்டும், மிருதுவான வெள்ளை நிற பட்டன்-அப் சட்டையும் அணிந்திருந்தார். பவுலா ஹர்ட், நிகழ்ச்சிக்கு ஏற்ற தோற்றத்தில், நேர்த்தியான கருப்பு நிற தோள்பட்டை திறந்த உடையுடன், பளபளப்பான நெக்லஸ் மற்றும் எளிய காதணிகளுடன் ஜொலித்தார். இருவரும் விருந்தினர்களுடன் இயல்பாகவும், இணக்கமாகவும் பழகி வந்ததை காண முடிந்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் இத்தாலியின் அமால்ஃபி கடற்கரையில், ஜெஃப் பெசோஸ் மற்றும் லாரன் சான்செஸ் ஆகியோரின் நிச்சயதார்த்த விருந்திலும் கேட்ஸ் மற்றும் ஹர்ட் இருவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் இந்த பிரம்மாண்ட நிகழ்வில், டாம் பிராடி, ஆர்லாண்டோ ப்ளூம், கிம் கர்தாஷியன், ஓப்ரா வின்ஃப்ரே, கிரிஸ் ஜென்னர், கோரி காம்பிள், க்ளோ, கெண்டல், கைலி மற்றும் கெய்ல் கிங் போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டது ஒரு சிறப்பு.

பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட்டின் காதல் கடந்த 2023 பிப்ரவரியில் முதன்முறையாக பொதுவெளியில் தெரிய வந்தது. இது, கேட்ஸ் மற்றும் மெலிண்டா பிரெஞ்ச் கேட்ஸ் இருவரும் 27 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, 2021ஆம் ஆண்டு விவாகரத்து செய்த கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு என்பது குறிப்பிடத்தக்கது.

“பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் டேட்டிங் செய்வது பலருக்கும் தெரிந்திருந்தாலும், பவுலா இன்னும் பில் கேட்ஸின் குழந்தைகளை நேரில் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. பில் கேட்ஸ் 69 வயதானவர் என்பதும், பவுலா ஹர்ட் 62 வயதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பவுலா ஹர்ட், ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்த விதவை என்பதும் அவருக்கு 2 குழந்தைகள் என்பதும் பலர் அறிந்ததே.