பேச்சுவார்த்தைக்கு வாங்க என கெஞ்சும் அமெரிக்கா.. சீனா கொடுத்த மறக்க முடியாத அடி..

  அமெரிக்கா ஒரு நடவடிக்கை எடுத்தால், அந்த நாட்டை எதிர்த்து பேசும் வல்லமை எந்த நாட்டிற்கும் இல்லாத நிலையில், சீனா அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா சீனாவுக்கு 145% வரி…

usa china

 

அமெரிக்கா ஒரு நடவடிக்கை எடுத்தால், அந்த நாட்டை எதிர்த்து பேசும் வல்லமை எந்த நாட்டிற்கும் இல்லாத நிலையில், சீனா அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா சீனாவுக்கு 145% வரி விதித்ததால், சீனாவின் பொருளாதாரம் நிலைகுலையும் என்று அமெரிக்கா கணித்தது. ஆனால் சீனா, கொஞ்சமும் அசராமல், அமெரிக்க பொருள்களுக்கு 125% வரி அறிவித்துள்ளது. மேலும், ஏப்ரல் 12 முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும் என அறிவித்ததே, அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு விவசாயப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், அவற்றிற்கு 125% வரி விதிப்பது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பதால், அமெரிக்கா நிலைகுலைந்துள்ளது.

ஆரம்பத்தில் பங்கு சந்தை உயரும் நிலையில் இருந்தது. ஆனால், சீனாவின் இந்த அறிவிப்புக்குப் பிறகு பங்கு சந்தை மீண்டும் வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. சீனா கொடுத்த மறக்க முடியாத பதிலடி காரணமாக, அதிர்ச்சி அடைந்த வெள்ளை மாளிகை, சீனாவிடம் பேச்சுவார்த்தைக்காக அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சீனா அதனை கண்டுகொள்ளவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: “சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளார். இரு நாடுகளுக்கு இடையிலான வரிகள் தொடர்பான பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ளலாம். தொடர்ந்து சீனா பதிலடி நடவடிக்கை எடுப்பது, அந்த நாட்டிற்கு நல்லதல்ல. பொருளாதாரத்தில் மிகவும் வலுவான நாடாக அமெரிக்கா இருப்பதால், 75 நாடுகள் எங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள முன்வந்துள்ளன. எனவே சீனா தங்களுக்கே நல்லது ஏற்பட வேண்டும் என விரும்பினால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். நிச்சயம் அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இதுவரை சீனா இதற்கு பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையில்லாமல் டிரம்ப் தான் இந்த வர்த்தக போரைத் தொடங்கி வைத்துள்ளார் என்றும், அவர் தொடங்கிய போர் அவருடைய நாட்டிற்கே வினையாக மாறியுள்ளதாகவும், உலக நாடுகளுடன் அனுசரித்து ஒத்துப் போனால் தான் எல்லா நாடுகளும் முன்னேற முடியும் என்றும், இந்த வர்த்தக போர் எந்த பயனும் தராமல் டென்ஷன் மட்டுமே தரும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எனவே, மீண்டும் மீண்டும் சீனாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் அமெரிக்கா, 145% வரியை திரும்பப் பெறும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.