Siragadikka Aasai: பல்பு வாங்கிய மொத்த குடும்பம்.. திருந்தாத மனோஜ்.. மீனா-சீதா தம்பிக்கு மீண்டும் சிக்கல்..!

  விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், மனோஜை மொட்டை மாடிக்கு அழைத்து ‘ரோகினி,  ஏடிஎம் கார்டு குறித்து முத்து, மீனா, ரவி , ஸ்ருதி பேசுகின்றனர். இதற்கிடையில், “எனக்கும் அம்மாவுக்கும்…

sa4 1

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில், மனோஜை மொட்டை மாடிக்கு அழைத்து ‘ரோகினி,  ஏடிஎம் கார்டு குறித்து முத்து, மீனா, ரவி , ஸ்ருதி பேசுகின்றனர். இதற்கிடையில், “எனக்கும் அம்மாவுக்கும் சண்டை மூட்ட பார்க்கிறீர்களா?” என்று மனோஜ் கூற, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.  இதைத் தொடர்ந்து ‘நீ எக்கேடும், கெட்டுப்போ!” எனக் கூறி மனோஜை முத்து விரட்டியடிக்கிறார்.

அதன்பின், மீனா, “நீ ரோகிணியிடம் கேட்ட மாதிரி என்னிடமும் ஏடிஎம் கார்டு கேட்டா என்ன செய்வது என கேட்க, “நான் ஒரு பிளான் வச்சிருக்கேன்” என்று முத்து பதிலளிக்கிறார்.

மறுநாள் காலை, முத்து மீனாவிடம், “ஏடிஎம் கார்டை கொண்டு வா” எனக் கூற, மீனா அதை கொண்டு வந்த போது  “அம்மாவிடம் கொடு” என சொல்லுகிறார். அப்போது அண்ணாமலை, “ஏன் அம்மாவிடம் கொடுக்க சொல்றே?” எனக் கேட்க, “இந்த வீட்டின் நிதி அமைச்சர் அம்மா தான். ஏற்கனவே பார்லர் அம்மாவிடம் இருந்து ஏடிஎம் கார்டை வாங்கி வச்சிட்டாங்க” என்று பதிலளிக்கிறார்.

அண்ணாமலை, விஜயாவிடம், “நீ செய்தது ரொம்ப தப்பு. இப்படி எல்லாம் செய்யக்கூடாது. அவரவர் சம்பாதிக்கும் பணம் அவரவருக்கு தான்” எனக் கூற, விஜயா, “நான் செய்தது எதுவும் தப்பில்லை” என பதிலளிக்கிறார். இதற்கு மனோஜ், “ஆமாம் அம்மா செய்தது சரிதான்” என்று உடன்படுகிறார்.

ஆனால், முத்து, மீனா, ஸ்ருதி, ரவி ஆகியோர் இது ரொம்ப தப்பென்று கூற, விஜயா எரிச்சல் அடைகிறார்.

இந்நிலையில் திடீரென ரோகிணி ” ஆன்ட்டி செய்தது எதுவும் தப்பில்லை. அவர் எதை செய்தாலும் நன்மைக்காகத்தான் செய்வார். இனிமேல் நான் சம்பாதிக்கும் பணம் எல்லாம் ஆண்டிக்குத்தான். நானே விரும்பித்தான் ஏடிஎம் கார்டை கொடுத்தேன். எனக்கு செலவுக்கு பணம் தேவை என்றால், ஆன்டியிடம் கேட்டுத் தான் வாங்குவேன்” எனத் தெரிவிக்க, அனைவரும் அதிர்ந்து போகின்றனர்.

முத்து, மீனா உள்ளிட்ட குடும்பமே அதனால் பல்பு வாங்க “பஞ்சாயத்து முடிஞ்சிடுச்சு, கலைஞ்சு போங்க!” எனக் கூறி விஜயா கெத்தாக சொல்கிறார்.

விஜயா சென்ற பிறகு,  ரோகிணி ’எனக்காக பேசுகிறேன் எனக் கூறி, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என முத்து, மீனாவை பார்த்து ஆத்திரத்துடன் கூறுகிறார்.

அதற்கு முத்து, “தலையில் அடித்து கொள்ள… எனக்கு இதெல்லாம் தேவையா!” என பதிலளிக்க, அண்ணாமலை, “யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே?” என்று கண்ணதாசனின் வரிகளை கூறுகிறா.ர் இதை முத்து ஏற்றுக்கொள்கிறார்.

இதனையடுத்து மீனா மற்றும் தோழி இருவர் பைக்கில் பயணிக்கும் போது, இன்னொரு தோழியும் பைக்கில் வந்து சேருகிறார். மூவர் சேர்ந்து செல்லும் போது, அருண் அவர்களுக்கு  500 ரூபாய் அபராதம் விதிக்கிறார்.

மீனா கெஞ்சியும், “நீ அந்த ரவுடியின் பொண்டாட்டிதானே?” எனக் கேட்கிறார். மீனா, “எனது கணவர் ரவுடி கிடையாது, டிரைவர்’ என்று சொல்லிவிட்டு பைன் கட்டி விட்டு  செல்கிறார்கள்.

மீனா சென்ற பிறகு, சீதா வருகிறார். சீதாவுடன் ரொமான்ஸ் செய்யும் அருண், “வா, நாம் காபி ஷாப் போகலாம்” என அழைக்க, இருவரும் செல்கிறார்கள். இதனுடன், அத்தியாயம் முடிகிறது.

நாளைய எபிசோட்டில்  மீனா, சீதாவின் தம்பியை சிட்டி கடத்தி வைத்து போதை மருந்து செலுத்துகிறார். முத்துவும், செல்வமும் மீனாவின் தம்பியை ஊரெங்கும் தேடுவதுடன் புரமோ முடிவுக்கு வருகிறது.