மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்.. இன்னொரு லாக்டவுனை உலக மக்கள் தாங்குவார்களா?

  2020 முதல் 2023 வரையிலான மூன்று ஆண்டுகளாக கொரோனா வைரஸை எதிர்த்து போராடிய பிறகு, தற்போது ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் COVID-19 தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளதாக அந்த நாடுகளின் சுகாதாரத்துறை…

corona

 

2020 முதல் 2023 வரையிலான மூன்று ஆண்டுகளாக கொரோனா வைரஸை எதிர்த்து போராடிய பிறகு, தற்போது ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் COVID-19 தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளதாக அந்த நாடுகளின் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அதிகரிப்பு, ஆசியா முழுவதையும் படிப்படியாக தனது பிடியில் எடுத்துக்கொண்டு புதியொரு பெருந்தொற்றை உருவாக்க கூடிய ஆபத்தைத் தோற்றுவிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காஙில் உள்ள Centre for Health Protection நிறுவனத்தின் தொற்றுநோய் பிரிவின் தலைவர் அல்பர்ட் ஆவ், உள்ளூர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது, நகரத்தில் தற்போது கொரோனாவைச்சார்ந்த தொற்று மிக அதிகமாக உள்ளதாக கூறினார். மேலும், மே 3 ஆம் தேதி வரை, 31 கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும், தொற்று மற்றும் மரண எண்ணிக்கை உச்சநிலையை எட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிங்கப்பூரில், சுகாதார அமைச்சகம் முதன்முறையாக மே மாதத்தில் தொற்று எண்ணிக்கையைப் பற்றிய அறிக்கையை வெளியிட்டது. மே 3 முடிவடைந்த வாரத்தில், கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 28% உயர்வுடன் சுமார் 14,200 புதிய வழக்குகள் பதிவானது.

பிரபல செய்தி ஊடகங்களின் தகவலின்படி, சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள இந்த கொரோனா தொற்று அதிகரிப்பு, மக்கள் தொகையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதாலேயே இருக்கலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காலத்தில் இந்தியா இரண்டு மிகப்பெரிய லாக்டவுனை அறிவித்த நிலையில் லாக்டவுன் நேரத்தில் ஏழை எளிய மட்டும் நடுத்தர மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். வேலை இன்றி வருமானம் இன்றி இருந்த நிலையில் அதேபோன்று இன்னொரு நிலைமை வரக்கூடாது என்று கடவுளை வேண்டினர்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதை பார்க்கும்போது இந்தியா உள்பட உலக மக்கள் மீண்டும் ஒரு லாக்டவுனை தாங்க மாட்டார்கள் என்றே கூறப்பட்டு வருகிறது.