மே 14ஆம் தேதி பாகிஸ்தானில் மூன்று வாரங்கள் பிடிபட்டு இருந்ததை தொடர்ந்து திரும்பிய பின், புர்ணம் குமார் ஷா என்ற எல்லைப் பாதுகாப்பு படை வீரர் மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார். பாகிஸ்தான் ரேஞ்சர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அவருக்கு மன வலியை ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 23ஆம் தேதி, இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லையை தவறுதலாக கடந்த அவரை பாகிஸ்தான் ரேஞ்சர்கள் கைது செய்திருந்தனர். பின்னர், மே 10ஆம் தேதி இரு நாடுகளும் எல்லை பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான ஒப்புதலுக்கு வந்ததிலிருந்து நான்காவது நாளில் அவர் விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்கு திரும்பினார்.
இந்த நிலையில் புர்ணம் குமார் ஷா உடல் சிகிச்சை மட்டுமின்றி, மன அழுத்தத்திற்கும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உதாரணமாக அவர் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்தபோது குளிக்க, தூங்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
“அவர் பலமுறை கண்கள் கட்டப்பட்ட நிலையில் வைக்கப்பட்டதாகவும், இது அவருடைய மனநிலையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவரிடம் பேசிய மனோதத்துவ மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், எல்லைப் பாதுகாப்பு அமைப்பின் முக்கிய செயல்பாடுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விவரங்களை அவரிடம் விசாரித்து மன அழுத்தம் தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
புர்ணம் குமார் ஷா மூன்று வாரம் பிடிப்பில் இருந்த போது ஏற்பட்ட மனதளவிலான பாதிப்பில் இருந்து மீட்கும் நோக்கத்தில் தற்போது அவரிடம் விசாரணை மற்றும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
நேற்று முன் தினம் காலை 10.30 மணிக்கு, அம்ரிஸ்தரில் உள்ள அட்டாரி-வாகா சரக்கு தணிக்கை கழகத்தின் வழியாக பாகிஸ்தான் ரேஞ்சர்களால் இந்தியாவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். இது பலமுறை பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு நடந்த ஒரு நிகழ்வாகும். ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் தரப்பில் ஒரே பதில் தான் வழங்கப்பட்டது: அது “மேலதிக உத்தரவை நாங்கள் காத்திருக்கிறோம்.” என்பதுதான்.
ஏப்ரல் 23ஆம் தேதி முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்களின் கட்டுப்பாட்டில் இருந்த BSF வீரர் புர்ணம் குமார் ஷா வீடு திரும்பியதும், அவரது குடும்பத்தில் மகிழ்ச்சி எழுந்தது. இந்திய மத்திய அரசு மற்றும் மேற்கு வங்க மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
என் மகன் மீண்டும் நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே என் ஆசை. அவர் மீண்டும் நாட்டைப் பாதுகாக்க செல்வார்,” என புர்ணம் குமார் ஷா தந்தை கூறினார்