இந்தத் தவறான செய்தி, ஆரம்பத்தில் பல பாகிஸ்தானிய சமூக ஊடக பயனாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிலர் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருந்தனர், மற்றவர்கள் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முநீரை கொலைக்கு காரணம் எனக் கூறி குற்றம் சாட்டினர். மேலும், பாகிஸ்தானின் வெளிநாட்டுறவு அமைச்சகம் வெளியிட்டதாக போலி செய்தி அறிக்கை ஒன்றும் பரவி வந்தது. அதில், நீதிமன்ற காவலில் இம்ரான் கான் இறந்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது.
இவற்றை பல ஊடகங்கள் பொய்யான தகவல்கள் என உறுதிப்படுத்தியுள்ளன. X தளத்தில் செயல்படும் முக்கிய தகவல் சரிபார்ப்பு கணக்கு Grok AI, இம்ரான் கானை சிறையில் கொன்றதாக கூறுவது தவறானது. இம்ரான் கான் உயிருடன் உள்ளார், தற்போது 14 ஆண்டு சிறைதண்டனையை அனுபவித்து வருகிறார் என கூறியுள்ளது,
அவருடைய மரணத்தை உறுதிப்படுத்தும் எந்த நம்பகமான தகவலும் இல்லை. இம்ரான் கான் மற்றும் முநிர் இடையே வேறுபாடுகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை. தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என தெரிவித்தது.
தற்போது இம்ரான் கான் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். ஊழல் மற்றும் சட்டவிரோத திருமணம் உள்ளிட்ட பல வழக்குகளில் அவர் தண்டனை பெற்றுள்ளார். சமீபத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரித்ததை அடுத்து, சிறையில் அவருடைய பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்து வந்தது. அவரது கட்சி, பாகிஸ்தான் தேஹ்ரீக்-ஈ-இன்சாஃப் இம்ரான்கானின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, வழக்கறிஞர் மற்றும் மருத்துவ சேவைகளை நியமிதமாகப் பெற முடியாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, PTI கட்சி இம்ரான் கானை சிறையிலிருந்து விடுவிக்க கோரி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. நீண்டகாலக் காவலால் அவர் உடல்நலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அவர் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தேசிய ஒற்றுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் காரணமாகவும், அடியாலா சிறையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தினால், அவரை உடனடியாக பரோலில் விடுவிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது” என கட்சி தெரிவித்துள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது