“தனித்துப் போட்டியிடுவது என்ற சீமான் செய்த தவறை விஜய் செய்ய மாட்டார் என்றும், தேர்தல் முடிவில் விஜய் இடம் 10 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே அவரது லெவல் வேறு,” என்றும் பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜயகாந்த், கமல்ஹாசன், சீமான் ஆகியோர் அரசியல் கட்சி ஆரம்பித்து ஆரம்பத்தில் தனித்துதான் போட்டியிட்டார்கள். விஜயகாந்த், கமல்ஹாசன் தனித்துப் போட்டியிடுவது என்ற பாதையில் இருந்து விலகிவிட்டாலும், சீமான் இன்னும் தனித்துதான் போட்டியிட்டு வருகிறார். ஆனால், அவரால் இன்னும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை என்றும், அவரது கட்சியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ-க்கள், ஒரு எம்.பி. கூட 15 ஆண்டுகாலம் கட்சி நடத்தியும் கூட செல்ல முடியவில்லை. “இந்த எதார்த்தத்தை விஜய் நன்றாக புரிந்து கொண்டுதான் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார் என்றும், கண்டிப்பாக சீமான் செய்த தவறை விஜய் செய்ய மாட்டார் என்றும்,” பத்திரிகையாளர் மணி தெரிவித்தார்.
“கொள்கை எதிரி, பாயாசம் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து வேலை என்றும், விஜய்க்கு முக்கிய எதிரி பாஜக அல்ல, திமுகதான் என்றும்,” அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, கடைசி நேரத்தில் அதிமுக, பாஜக கூட்டணிக்கு விஜய் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும், குறைந்தபட்சம் அவரிடம் 10 எம்.எல்.ஏ.க்கள் இருந்தாலே அவரது அரசியல் மதிப்பு வேற லெவலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
“எனக்கு வரும் தகவலின்படி, திமுக இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை சர்வதேச நிறுவனங்களை வைத்து கருத்துக்கணிப்பு எடுத்து வருகிறது என்றும், கருத்துக்கணிப்பு திமுகவுக்கு சாதகமாக இல்லை என்றும்,” அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் மூன்று விதமாக வரலாம். ஒன்று திமுகவுக்கு தனி மெஜாரிட்டி இந்த முறை கிடைக்காது என்றும், திமுக கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இரண்டாவதாக, அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் கண்டிப்பாக அந்தக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று அவர் தெரிவித்தார். மூன்றாவது ஆக, எந்த கூட்டணிக்க்கும் மெஜாரிட்டி வராமல் தொங்கு சட்ட சபை அமையும் என்றும், அப்போது விஜய் இடம் இருக்கும் 10 அல்லது 20 எம்.எல்.ஏ.க்கள் மிகப்பெரிய அளவில் மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், “2026 தேர்தல் தமிழகம் இதுவரை சந்தித்திராத வித்தியாசமான தேர்தலாக இருக்கும்,” என்றும் பத்திரிகையாளர் மணி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.