வல்லவனுக்கு வல்லவன்.. ஹேக்கர்களை ஒரே நொடியில் ஏமாற்றும் கூகுள் குரோம்.. செம்ம அப்டேட்..!

  கூகுள் நிறுவனம் தனது குரோம் பிரெளசரில் பாதுகாப்பு அம்சங்களை மேலும் பலப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருடப்பட்ட அல்லது ஹேக் செய்யப்பட்ட பாஸ்வேர்டுகளை எளிதாக மாற்ற உதவும் தானியங்கி பாஸ்வேர்டு மாற்றும் வசதியை…

chrome

 

கூகுள் நிறுவனம் தனது குரோம் பிரெளசரில் பாதுகாப்பு அம்சங்களை மேலும் பலப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருடப்பட்ட அல்லது ஹேக் செய்யப்பட்ட பாஸ்வேர்டுகளை எளிதாக மாற்ற உதவும் தானியங்கி பாஸ்வேர்டு மாற்றும் வசதியை (Automated Password Change feature) அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் I/O நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய வசதி, குரோமில் உள்ள பாஸ்வேர்டு மேனேஜருடன் இணைக்கப்படும். உங்கள் பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்பட்டால், அது குறித்து பாஸ்வேர்டு மேனேஜர் உடனே உங்களுக்கு எச்சரிக்கை செய்யும். அதன்பின் ஒரே கிளிக்கில் புதிய பாஸ்வேர்டை உருவாக்கவும், அதை உடனடியாகப் பயன்படுத்தவும் இந்த புதிய வசதி உதவும். இதனால் குரோம் பிரெளசர் ஹேக் செய்யப்பட்டு இருந்தாலும் ஹேக்கர்கள் ஏமாந்து போவார்கள்.

ஆனால், இந்த வசதி தற்போது சில குறிப்பிட்ட இணையதளங்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த வசதியை மேலும் பல தளங்களுக்கு விரிவுபடுத்த, கூகுள் டெவலப்பர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

குரோமின் இந்த புதிய அப்டேட் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், பயனர்களின் அனுபவத்தையும் எளிதாக்குகிறது. குரோமின் துணைத் தலைவரும் பொது மேலாளருமான பரிசா தப்ரிஸ் கூறுகையில், “பலவீனமான அல்லது ஹேக் செய்யப்பட்ட பாஸ்வேர்டை மாற்றும் தற்போதைய முறை பயனர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இந்த செயல்முறையை எளிதாக்குவதன் மூலம், குரோம் பாதுகாப்பு மற்றும் பயன்பாடு இரண்டையும் மேம்படுத்துகிறது. இந்த அம்சம் நடைமுறைக்கு உகந்ததாகவும், பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், பயனர்களுக்குத் தேவையான வசதியை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பயனர்களின் ஆன்லைன் பாதுகாப்பு அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருப்பதை கூகுள் உறுதி செய்கிறது. ஆனால் அதே நேரத்தில் பயனரின் அனுமதி இல்லாமல் குரோம் தானாக பாஸ்வேர்டுகளை மாற்றாது. ஒவ்வொரு பாஸ்வேர்டு மாற்றத்திற்கும் பயனர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இது அவர்களின் தனிப்பட்ட தகவல் மற்றும் பாதுகாப்பு முடிவுகள் மீதான கட்டுப்பாட்டைப் பராமரிக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் ஹேக்கர்கள் வல்லவன் என்றால் குரோம் வல்லவனுக்கு வல்லவன் என்பதை நிரூபித்துள்ளது.