இது தானா சேர்ந்த கூட்டம்.. விஜய்யின் வேல்யூ யாருக்கும் தெரியவில்லை.. 18-30 வயது 1 கோடி இளைஞர்களின் வாக்குகள் தவெகவுக்கு தான்.. பத்திரிகையாளர் சுவாமிநாதன்..!

மற்ற நடிகர்கள் கட்சி தொடங்கி தோல்வியடைந்ததை போல் விஜய்யையும் எல்லோரும் குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்றும், அவருடைய உண்மையான செல்வாக்கு இன்னும் யாருக்கும் தெரியவில்லை என்றும் பத்திரிகையாளர் சுவாமிநாதன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறியது பெரும்…

vijay politics

மற்ற நடிகர்கள் கட்சி தொடங்கி தோல்வியடைந்ததை போல் விஜய்யையும் எல்லோரும் குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்றும், அவருடைய உண்மையான செல்வாக்கு இன்னும் யாருக்கும் தெரியவில்லை என்றும் பத்திரிகையாளர் சுவாமிநாதன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2026 ஆம் ஆண்டு தேர்தலை பொறுத்தவரை, தேர்தல் ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, 18 வயது முதல் 30 வயது வரை உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடியை தாண்டுகிறது என்றும், இதில் கண்டிப்பாக ஒரு கோடி வாக்குகள் விஜய்க்குத்தான் விழும் என்றும் சுவாமிநாதன் தெரிவித்தார்.

ஒவ்வொரு தேர்தலிலும் புதிய வாக்காளர்கள் இருந்தாலும், அந்த தேர்தல்களில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. என்ற இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே புதிய வாக்காளர்களுக்கு இருந்தது. எனவே, அவர்கள் பெரும்பாலானோர் வாக்களிக்கவே செல்லவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த தேர்தலில் விஜய் என்ற புதிய முகம் களத்தில் இறங்குவதால், இளைஞர்களை அவர் மொத்தமாக ஈர்த்துள்ளார் என்றும், கண்டிப்பாக புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களின் வாக்குகள் விஜய்க்குத்தான் விழும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எவ்வளவு என்பதை பற்றிய கருத்துக்கணிப்புகளை எடுப்பதை விட, விஜய்யின் செல்வாக்கு எவ்வளவு என்றுதான் கருத்துக்கணிப்பு எடுத்து வருகின்றன என்றும், அவற்றில் 20 முதல் 30% வாக்குகள் விஜய்க்கு உண்டு என்பதுதான் அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் சுவாமிநாதன், இதுவரை விஜய்யை எல்லா அரசியல் கட்சிகளும் தவறாக மதிப்பிட்டிருந்தார்கள் என்றும், ஆனால் ரிசல்ட் வரும்போது விஜய்யின் உண்மையான மதிப்பு என்ன என்பது அவர்களுக்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.

தன்னை நம்பி இருக்கும் இளைஞர்களை ஏமாற்றும் வகையில் கண்டிப்பாக விஜய், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்றும், முதல் பொதுக்கூட்டத்திலேயே அவர் பா.ஜ.க.வை தனது கொள்கை எதிரி என்று அறிவித்துவிட்டார் என்றும், அதிலிருந்து அவர் பின்வாங்க மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது. அதேபோல், தி.மு.க.வை ஆட்சியில் இருந்து இறக்கியே தீருவேன் என்று விஜய் முடிவு செய்திருக்கும் நிலையில், அவர் அதற்காக கடுமையாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்வார் என்றும், தி.மு.க. ஆட்சி வீழ்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம் விஜய்யாகத்தான் இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த கருத்துக்கள் எல்லாம் விஜய்யின் ரசிகர்களுக்கும், தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.