தேமுதிக, பாமக இரண்டு கட்சிகளும் திமுக கூட்டணிக்கு செல்கிறதா? அப்ப விசிக என்ன ஆகும்?

  2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தல், ஒரு வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்றும், அரசியல் கட்சிகள் நொடிக்கு நொடி அணிகள் மாறுதல் என்ற காமெடிகள் நடக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து…

dmdk pmk

 

2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தல், ஒரு வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்றும், அரசியல் கட்சிகள் நொடிக்கு நொடி அணிகள் மாறுதல் என்ற காமெடிகள் நடக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அந்த கூட்டணியிலேயே இருக்குமா? அதேபோல், அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிகரிக்குமா என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

குறிப்பாக, தேமுதிக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் இன்னும் கூட்டணியை உறுதி செய்யாமல் உள்ளன. அதிமுக கூட்டணியில் இந்த இரு கட்சிகளும் சேர அதிக வாய்ப்பு இருந்தாலும், திமுக கூட்டணியிலும் சேர சில வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த முறை, 2011ஆம் ஆண்டு ஜெயித்தது போல் எளிதாக ஜெயிக்க முடியாது என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் புரிந்து கொண்டதாகவும், அதனால் கூடுதலாக இன்னும் சில கட்சிகளை சேர்க்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில்தான், அவர் தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளையும் திமுக கூட்டணியில் இழுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு வேளை பாமக திமுக கூட்டணிக்கு வந்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறிவிடும் வாய்ப்பு இருந்தாலும், “பரவாயில்லை” என்றுதான் அவர் நினைப்பதாக கூறப்படுகிறது.

இந்த இரு கட்சிகளும் திமுக கூட்டணிக்கு வந்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிமுக கூட்டணிக்கு அல்லது விஜய் கட்சியின் கூட்டணிக்கு செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும்,

தேர்தல் இன்னும் 10 மாதங்கள் இருப்பதால், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், எந்த கட்சியும் எந்த கூட்டணிக்கும் செல்லலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.