விஜய் நடத்தும் விக்கிரவாண்டி மாநாடு.. தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு 17 நிபந்தனைகளுடன் அனுமதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27ம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நடைபெறுவது உறுதியாகி உள்ளது. இந்த மாநாட்டை நடத்த, 17 நிபந்தனைகளுடன் நேற்று இரவு…

Vijay'Vikravandi conference : Permission for Tamilaga vetri kazhagam conference with 17 conditions

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர் 27ம் தேதி விஜய்யின் தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு நடைபெறுவது உறுதியாகி உள்ளது. இந்த மாநாட்டை நடத்த, 17 நிபந்தனைகளுடன் நேற்று இரவு விழுப்புரம் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கக நிபந்தனைகளை இந்த பதிவில் பார்ப்போம்

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தொடங்கினார். அதன்பின்னர் தேர்தல் ஆணையத்தில் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்ய விண்ணப்பிக்கப்பட்டது. அந்த விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.தமிழக வெற்றிக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது என்றும், எந்தக் கட்சிக்கும் தற்போது ஆதரவு அளிக்காது என்றும் விஜய் கூறியிருந்தார்.அதன்படியே யாருக்கும் அவர் ஆதரவு தரவில்லை..

2026ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் போட்டியிட போகிறது. விஜய் தனது கட்சியின் பிறகட்சிகளின் மூத்த தலைவர்களை சேர்க்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அனேகமாக முதல் மாநாட்டில் அவர்கள் அனைவரும் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

விஜய் தனது முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தில் அக்டோபர் 27-ம் தேதி நடத்துகிறார். . இதனையொட்டி, மாநாடு நடத்த அனுமதி கோரி, கடந்த 21-ம் தேதி தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் ஏடிஎஸ்பி திருமாலிடம் அண்மையில் மனு அளித்தார்.

இதனிடையே, மாநாடு நடத்துவது தொடர்பாக ஏற்கெனவே காவல்துறை கேட்டிருந்த 31 கேள்விகள் தொடர்பான பணிகளை கட்சி நிர்வாகிகள் செய்து முடித்திருந்தனர். மேலும் மாநாடு நடைபெறும் இடத்தில் அனுமதி கிடைத்தவுடன் மாநாட்டுப் பணியைத் தொடங்க திட்டமிட்டிருந்தார்கள்.

இந்நிலையில், . இந்த மாநாட்டை நடத்த, 17 நிபந்தனைகளுடன் நேற்று இரவு விழுப்புரம் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். எக்காரணத்தை கொண்டும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. விளம்பரப் பதாகைகள், கட்-அவுட்டுகள் வைக்கக்கூடாது என்றும் முதியவர்கள், கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான இட வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றும் மாநாட்டு திடலில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதிகளை போதுமான அளவில் ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விஐபி-க்கள் வரும் வழிகளில் எந்தவித பிரச்சினைகளும் நிகழாமல் போதிய தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்திய ஏடிஎஸ்பி திருமால் நேற்றிரவு மாநாட்டுக்கு அனுமதி வழங்கினார்.