நாங்க பரம்பரை பரம்பரையா அதிமுக தான்.. இரட்டை இலை தவிர எங்களுக்கு வேறு எந்த சின்னமும் கண்ணுக்கு தெரியாது.. இப்பவும் எங்களுக்கு அதிமுக என்ற கட்சி மீது கோபம் இல்லை.. கட்சி தலைமை ஈபிஎஸ் மேல தான் கோபம்..அக்டோபர் 3, 2026, 08:59
இடைத்தேர்தல் முடிவுக்காக காத்திருக்கும் வேலுமணி, சிவி சண்முகம் குரூப்.. இடைத்தேர்தலில் அதிமுக தோற்றால் அல்லது டெபாசிட் இழந்தால் அதிமுகவே குலுங்கும்.. ஈபிஎஸ் பதவியில் இருந்து தூக்கியெறியப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..செப்டம்பர் 29, 2026, 11:15
இன்று தமிழகத்தில் 3 முன்னாள் முதல்வர்கள்.. ஈபிஎஸ் எத்தனையோ உட்கட்சி பிரச்சனை இருந்தாலும் தனது சொந்த தொகுதியில் ஜெயித்து எம்.எல்.ஏ ஆகிவிட்டார்.. சொந்த கட்சியில் இருந்து விரட்டப்பட்டாலும் திமுகவில் தஞ்சம் அடைந்து சொந்த தொகுதியில் எம்.எல்.ஏ ஆகிவிட்டார் ஓபிஎஸ்.. ஆனால்செப்டம்பர் 21, 2026, 16:34
விஜய்யின் ஒவ்வொரு ஆவேச வார்த்தையும் அதிமுகவின் அஸ்திவாரம் சரிகிறது..இது தெரியாமல் எடப்பாடி பழனிசாமி சிரித்து கொண்டே சட்டசபை நிகழ்வுகளை ரசித்து கொண்டிருக்கிறார்.. விஜய் ஸ்கோர் பண்ண, பண்ண, அதிமுக ஓட்டெல்லாம் அவருக்கு போயிடும்..செப்டம்பர் 8, 2026, 16:30
விஜய்யை வீழ்த்த வேண்டும் என்று திமுகவே அமைதியாக இருக்கிறது… ஆனால் தினகரன் மட்டும் ஏன் இவ்வளவு அவசரமாக காய்களை நகர்த்துகிறார்? விஜய்யை எதிர்க்க வேண்டும் என்பதுதான் நோக்கமா?செப்டம்பர் 6, 2026, 07:59
சசிகலாவிடம் கட்சியை ஒப்படைத்துவிட்டு அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறாரா எடப்பாடி பழனிசாமி.. 11 தேர்தலில் தொடர்ச்சியான தோல்விக்கு பொறுப்பேற்கிறாரா? சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மற்றும் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைந்தால் அதிமுக வலிமையாகுமா? கட்சியை மீட்க இது ஒன்றுதான் வழியா? திமுக பெயர் மேலும் மேலும் டேமேஜ் ஆகிவரும் நிலையில் 2வது இடத்தையாவது அதிமுக பிடிக்க வேண்டும் என்றால் தலைமை மாற வேண்டுமா?ஜூலை 13, 2026, 07:50
இப்ப கூட ஒன்னும் மோசமில்லை.. டிடிவி தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்த்து கொள்ளலாம்.. ஓபிஎஸ்-ஐ எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள் என்று சொன்னால் உடனே வந்துவிடுவார். இவர்கள் வந்துவிட்டாலே போதும், அதிமுகவில் இருந்து போன பாதி பேர் மீண்டும் திரும்பிவிடுவார்கள்.. அதன்பின் மாதம் ஒரு பொதுக்கூட்டம், தவெக அரசு தப்பு செய்யும்போது போராட்டம், மத்திய பாஜகவின் ஆதரவு என 5 வருடங்களில் எடப்பாடியார் நன்றாக ஸ்கோர் செய்யலாம்.. திமுக பிரபலங்களில் மீது வழக்குகள் குவியும் என்பதால் அவர்களால் கட்சியை கவனிக்க முடியாது.. அந்த வாய்ப்பை அதிமுக பயன்படுத்தலாம்.. ஆனால் ஈபிஎஸ் செய்வாரா?ஜூலை 6, 2026, 21:36
2026 ஏப்ரல் தேர்தலில் விழுந்த வாக்குகள் அப்படியே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் விழுமா? எந்த உலகத்தில் இருக்கின்றார்கள்? இருவரும் சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் கூட தேறாது.. மக்கள் தவெக நல்லாட்சியை பார்த்துவிட்டார்கள்.. இப்படி ஒரு ஆட்சிக்கு தான் 50 வருஷமா ஏங்கினார்கள்.. அதை மிஸ் செய்ய மாட்டார்கள்.. எத்தனை தொகுதி இடைத்தேர்தல் வந்தாலும் அத்தனை தொகுதியிலும் தவெக தான் ஜெயிக்கும்.. அதிமுக, திமுகவுக்கு மூடுவிழா தான்ஜூன் 28, 2026, 15:20
அம்பாசமுத்திரத்தில் பொது வேட்பாளராக சீமான்.. மற்ற 5 தொகுதிகளில் 3ல் அதிமுக, 2 திமுக.. அதிமுக நிற்கும் தொகுதியில் திமுக, நாதக போட்டியிடாது.. திமுக நிற்கும் தொகுதியில் அதிமுக, நாதக போட்டியிடாது.. 6 தொகுதி இடைத்தேர்தலில் ஸ்டாலின், ஈபிஎஸ், சீமான் மறைமுக ஒப்பந்தம்? சீமான் ஜெயித்து சட்டமன்றம் சென்றால் அனல் பறக்குமா? அல்லது மீண்டும் டெபாசிட் இழந்து பரிதாபகரமான நிலையை அடைவாரா? அதிமுக, திமுக கூட்டணி சேர்ந்தாலும் தவெகவை வீழ்த்த முடியுமா? விஜய் கையில் தான் இருக்கிறது…ஜூன் 25, 2026, 14:26
காலியாகிறதா அதிமுக கூடாரம்.. பல எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைய விருப்பம் தெரிவித்ததாக தகவல்.. இன்னும் சில நாட்களில் எம்.எல்.ஏ பதவி ராஜினாமா செய்தி அடுத்தடுத்து வரும்.. புகழேந்தி தரும் அதிர்ச்சி தகவல்.. ஒருவழியா அதிமுகவை சோலி முடிச்சிட்டீங்களா ஈபிஎஸ்?மே 31, 2026, 11:45
கொத்து கொத்தாக அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வரும் பிரபலங்கள்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பிரசாந்த் கிஷோர் சொன்னார்.. விஜய் ஒரு திராவிட கட்சியை அகற்றிவிடுவார் என்று.. அதுதான் இப்போது நடக்கிறது.. அதிமுகவின் கோர் ஓட்டு தவெகவுக்கு போய்விட்டது.. இனி அதிமுக எந்த காலத்திலும் மீள முடியாது.. முக்கிய தலைவர்களை வெளியேற்றிய ஈபிஎஸ் தவறை இனி சரிசெய்யவே முடியாது.. தேர்தலுக்கு முன் தவெகவுக்கு சென்றவர்கள் மந்திரியாகிவிட்டார்கள்.. இனிமேல் போகும் நபர்களும் விரைவில் மந்திரி ஆவார்கள்…மே 30, 2026, 07:38
75 வருஷ திமுகவை ஓட விட்டாச்சு.. 50 வருஷ அதிமுக ரெண்டா உடைஞ்சு சிதைஞ்சு போய் இருக்குது.. 2 வருஷம் ஆன கட்சி இவ்வளவு பெரிய சாதனை செஞ்சது பொறாமை.. இன்னும் மேல மேல உயரமாக போகும் விஜய்யின் புகழ்.. பொறுக்க முடியாம புழுங்குகடா..மே 14, 2026, 08:10