முருகப்பெருமான் ஆனந்தமாக எழுந்தருளி இருக்கும் மலைகளில் ஒன்று சிவன் மலை. சிவபெருமான் திரிபுரர்களை சம்ஹாரம் பண்ண எல்லாவற்றையும் தயார் செய்தார். தேரைத் தயார் பண்ணச் சொன்னதும் ஆளாளுக்குப் போய் ஒவ்வொரு வடிவமாக தேரைத் தயார் பண்றாங்க.
போருக்குப் போகணும்னா அதற்கான வில், அம்பு எல்லாம் தேவை. அதனால் மேருகிரி என்ற மலையை வில்லாக மாற்றி கையில் பிடிக்கிறார். அப்படி அந்த மேருகிரி மலையை வில்லாக மாற்றும்போது அதில் இருந்து சிறு துகளானது பட்டு அது ஒரு மலையாக அமைகிறது. சிவன் அருளால் உருவானதால் அதற்கு சிவன் மலை என்று பெயர்.
காங்கேயம், ஈரோடுக்குப் பக்கத்துல அமைந்துள்ள மலை தான் இது. பார்க்குறதுக்கு அவ்வளவு ரம்மியமா இருக்கும். அவ்வளவு அருமையான காற்று, அற்புதமான மலை திருத்தலம் இது. முருகப்பெருமான் வள்ளியை மணம் கொண்டு மகிழ்ச்சியாக எழுந்தருளி அருள்புரிகிறார் என்ற வரலாறும் இத்தலத்துக்கு உண்டு. பொதுவாக விநாயகரை வழிபாடு பண்ணிட்டு அப்புறம்தான் முருகப்பெருமானை வழிபடுவர்.
ஆனால் இங்கு அது மாறுகிறது. முதல் வழிபாடே முருகருக்குத்தான். அந்த வகையில் இது ஒரு அதிசய ஆலயம். இங்கு பல சித்தர்களும் வாழ்ந்தனர். வாழ்ந்தும் வருகின்றனர். சிவவாக்கியரைத் தரிசிக்க முடியும் சிறப்புமிக்க மலை. கடும் ஜூரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜூரலிங்கேஷ்வரராகக் காட்சி தருகிறார். காசி சென்று வழிபட முடியாதவர்கள் இங்கு வந்து வழிபடலாம். அதற்குரிய பலன் கிடைக்கும்.
மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



