வந்தாச்சு ஆடிப்பூரம்… கல்யாணமாகாதவங்க, குழந்தை இல்லாதவங்க மிஸ் பண்ணிடாதீங்க..!

இன்று (14.8.2026) ஆடிப்பூரம். பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த அற்புத திருநாள் இதுதான். ஆடிப்பூரம் என்றதும் உமை அம்பிகை, ஆண்டாள் நாச்சியாரின் அவதார திருநாள் தான் நினைவுக்கு வரும். அம்பாள் கோவில் எல்லாவற்றிலும்…

இன்று (14.8.2026) ஆடிப்பூரம். பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்த அற்புத திருநாள் இதுதான். ஆடிப்பூரம் என்றதும் உமை அம்பிகை, ஆண்டாள் நாச்சியாரின் அவதார திருநாள் தான் நினைவுக்கு வரும். அம்பாள் கோவில் எல்லாவற்றிலும் வளைகாப்பு உற்சவம் நடைபெறும்.

பல கோவில்களில் பால்குடம் வழிபாடு நடக்கும். அந்த வகையில் ஆடிப்பூரம் அதிவிசேஷமான நாள். உண்மையிலேயே இதெல்லாம் கிடைக்குமா நமக்கு வாழ்க்கையிலன்னு நினைச்சவங்களுக்குக் கூட கல்யாணம், குழந்தைப் பேறு அப்படிங்கற இந்த இரு நலன்களையும் மிக அதிசயமாகப் பெற்றுத் தரும் உன்னதமான திருநாள்.

இன்று பலரும் பல மருத்துவங்கள் பார்த்தும் கைகூடாத வேளையில் இந்த ஒரே ஒரு விரதம் இருந்து குழந்தை பேறு பெற்று இருக்கிறார்கள். கல்யாணம் நடந்துருக்கு அப்படிங்கற போது இது உண்மையிலேயே விசேஷமான நாள். சர்வமாதா என்று சொல்லக்கூடிய அன்னை மகிழ்ச்சியாக இருக்கும் நாள்.

முதலில் அவளை மகிழ்ச்சியாக்கி விட்டு அவள் மடியில் உட்கார்ந்து அவள் பிள்ளைகளாக நாம் அதைச் செய்கிறபோது அவள் நிச்சயமாக அவர்களுக்குப் பரிபூரண அருளையும், ஆசியையும் வழங்குவாள். அத்தகைய உன்னதமான திருநாள் தான் இந்த ஆடிப்பூர திருநாள்.