காலில் கருப்பு கயிறு கட்டுவது என்ன ஃபேஷனா..? இல்ல…திருஷ்டியைப் போக்கவா…? செம ட்ரெண்டா இருக்கே..!?

Published:

காலில் கருப்பு கயிறு கட்டுவதைப் பார்த்திருக்கலாம். அதிலும் டீன்ஏஜ் வயதினர் பெரும்பாலானோர் இந்தக் கயிற்றைக் கட்டுகின்றனர். ஆண்களும், பெண்களும் கட்டுவது எதற்காக? சும்மா பேஷனுக்கா அல்லது இதுல ஏதாவது சயின்ஸ் இருக்கா? என்னன்னு பார்க்கலாமா?

கல்லால் அடிபட்டாலும் கண்ணால் அடிபடக்கூடாது. எத்தனை வயசானாலும் இந்த திருஷ்டி ஒரு மனுஷனை சுலபமாக அடையுது. அதுக்கு பரிகாரமாகத் தான் காலில் கருப்பு கயிறு கட்டுவது. ஆரம்பத்தில் தலைமுடியால இப்படிக் கட்டுனாங்க. அதன்பிறகு வயசுக்கு வர்ற பிள்ளைகளைக் காத்து கருப்பு அண்டக்கூடாதுன்னு கருப்பு நிறக் கயிறை மந்திரிச்சிக் கட்டி விடுவாங்க.

block thread3
block thread3

இது ரொம்ப காலமா இருக்குற விஷயம் தான். இது திருஷ்டிக்கு மட்டுமல்ல. நாம பார்க்கும்போது கருப்பு நிறத்தைப் பார்க்கும்போது எதிராளிக்கிட்ட இருந்து வர்ற எண்ணம் நல்ல எண்ணமாக இருக்கும். சில குழந்தைகள் நல்லாவே சாப்பிடாது.

யாராவது கண்ணு போட்டால் மறுநாளே ஒழுங்காக சாப்பிடாமல் அடம்பிடிக்கும். ஆண்களாக இருந்தால் வலது காலிலும், பெண்களாக இருந்தால் இடது காலிலும் இந்தக் கருப்புக் கயிறை அணிந்து கொள்ளலாம்.

இதைக் கட்டுவதற்கு என்று சில முறைகள் உள்ளன. இதில் 5 முடிச்சுகள் அல்லது 9 முடிச்சுகள் போடலாம். இதைப் பூஜை செய்து நாம் வழிபாடு பண்ணித் தான் கட்ட வேண்டும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டலாம்.

சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றால் அங்கேயேக் கட்டிக் கொள்ளலாம். அல்லது மேலே சொன்ன ஏதாவது ஒரு கிழமையில் வீட்டுக்கு அருகில் உள்ள கோவில்களில் சென்று கட்டிக்கொள்ளலாம். காளி, சரபேஸ்வர், பைரவர், சூலினிதேவி, ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களை வழிபட்டு இந்தக் கயிறைக் கட்டலாம். மாசமா இருக்குறவங்களும் கட்டலாம்.

இந்தக் கயிறு எவ்வளவு நாள் இருக்குதோ அவ்வளவு நாள் கட்டலாம். அல்லது 6 மாசத்துக்கு ஒரு முறை இந்தக் கயிறை மாற்றிக் கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக் கட்டிக்கொள்ளலாம். கருப்பு ஒத்துக்காதவர்கள் சிவப்புக் கயிறையும் கட்டக்கூடாது. அதற்குப் பதிலாக காலில் விரலில் தடைன்னு இரும்புல மெட்டி மாதிரி போடுவாங்க. இதைக் கருப்பு ஒத்துக்காத பெண்கள் போடலாம்.

காலில் கருப்புக் கயிற்றைக் கட்டினால் பிரச்சனை எதுவும் வராதான்னு கேட்டால் இது ஒரு நம்பிக்கை. இதைக் கொண்டு ஒரு சிலர் நமக்கு நல்ல விஷயங்கள் நடக்குது என்று நம்புவதால் தொடர்ந்து அவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கிறது.

block thread in leg
block thread in leg

மேலும் காலில் அணியும் தடையானது அங்குள்ள உணர்வு நரம்புகளைத் தொட்டுக்கொண்டே இருப்பதால் அங்கிருந்து மூளைக்கும், மற்ற உடல் உறுப்புகளுக்கும் செல்லும் ரத்த ஓட்டமானது தடையில்லாமல் செல்வதால் உடலிலும், மூளையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

இதன் மூலம் அறிவாற்றலும் மேம்படுகிறது. அதனால் தான் அன்றே பெரியவர்கள் உணர்வு ரீதியாகவும், ஒரு சில விஷயங்களை அறிவியல் ரீதியாகவும் சில விஷயங்களை சொல்லி வச்சிருக்காங்க.

மேலும் உங்களுக்காக...