வெறும் கல் தானே… கடவுள் சிலைகளுக்கு அபிஷேகம் செய்றது எதுக்கு?

இன்னைக்குப் பலரும் கோவில்களுக்குச் செல்வது எல்லாம் ஒரு நாகரிகமாகவே கருதுகின்றனர். மற்றபடி இறைவனோடு ஒன்றிணைந்து வழிபடுவது வெகுசிலர்தான். அவங்க போறாங்க. நாமும் போவோம். அப்ப தான் கெத்துன்னு நினைக்கிறாங்க. கடவுள் சிலைக்கு அபிஷேகம்னு சொன்னா…

abishekam

இன்னைக்குப் பலரும் கோவில்களுக்குச் செல்வது எல்லாம் ஒரு நாகரிகமாகவே கருதுகின்றனர். மற்றபடி இறைவனோடு ஒன்றிணைந்து வழிபடுவது வெகுசிலர்தான். அவங்க போறாங்க. நாமும் போவோம். அப்ப தான் கெத்துன்னு நினைக்கிறாங்க. கடவுள் சிலைக்கு அபிஷேகம்னு சொன்னா குதர்க்கவாதிகள் அது வெறும் கல் தானே. ஏன் பாலைப் போட்டு ஊற்றி யாருக்கும் பயன்படாம வீணாக்குறீங்கன்னு கேட்பாங்க. அதுக்கான விளக்கம்தான் இது. வாங்க பார்க்கலாம்.

அபிஷேகங்கள் செய்யும் போதும் இறைவனுடைய அழைப்பு கூடுகிறது. பால் அபிஷேகம் என்றால் ஒரு அழைப்பு, தேன் அபிஷேகம் என்றால் ஒன்று, பஞ்சாமிர்தம் என்றால் ஒரு அழைப்பு என்று உண்டு. பொதுவாக இறைவனை எவ்வாறு பார்க்கிறோம். சில நேரம் நண்பனாகப் பார்க்கிறோம், சில நேரத்தில் தாய், தந்தையாக நேசிக்கிறோம்.

அதனால்தான் நமக்குக் கிடைப்பதை இறைவனுக்கு கொடுத்துவிட்டு நாமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படித்தான் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் எந்தெந்த பருவத்தில் என்னென்ன கிடைக்கிறதோ அதை வைத்து இயற்கையோடு இயற்கையாக வழிபடுகிறோம்.

ஆகையால், அபிஷேகங்களுக்கு தனி சக்தி உண்டு. அதனால் இறை ஆற்றல் கூடும். ஆண்டவனுக்கு உரிய ஆராதனைகளுள் பதினாறு வகை உபசாரங்கள் முக்கியமானவை என்கின்றன ஆகமங்கள்.

அவற்றுள்ளும் அபிஷேகமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஆற்றல் மிக்கதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழில் திருமுழுக்கு என்று கூறப்படும் அபிஷேகத்துக்கு நம் முன்னோர் இருப்பத்தாறு வகை திரவியங்களைப் பயன்படுத்தினார்கள்.

காலப்போக்கில் அது பதினெட்டாகி, தற்போது பெரும்பாலான கோயில்களில் 12 வகை திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த திரவியங்கள் எள் எண்ணெய், பஞ்ச கவ்யம், பஞ்சாமிர்தம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, பழரசம், இளநீர், சந்தனம், சுத்த ஜலம் என்ற வரிசையில் அபிஷேகத்துக்கு பயன்படுத்தும் வழக்கம் பெரும்பாலான கோயில்களில் உள்ளது.