பெரிய ஆளாக இது ஒண்ணுதான் வழி…. லோகேஷ் சொன்ன டாப் சீக்ரெட்

தமிழ்சினிமாவில் உள்ள இளம் இயக்குனர்களில் பலர் தங்களது மாறுபட்ட சிந்தனைத்திறனால் மளமளவென்று ஏறுமுகமாக முன்னேறி வருகின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வந்த அத்தனைப் படங்களும் ஹிட். கார்த்தியின் நடிப்பில் இவர்…

logesh kanagaraj

தமிழ்சினிமாவில் உள்ள இளம் இயக்குனர்களில் பலர் தங்களது மாறுபட்ட சிந்தனைத்திறனால் மளமளவென்று ஏறுமுகமாக முன்னேறி வருகின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் வந்த அத்தனைப் படங்களும் ஹிட். கார்த்தியின் நடிப்பில் இவர் எடுத்த கைதி படம் தான் இவருக்கு முதல் படம்.

அதன் வெற்றியைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தை விஜயை வைத்து இயக்கினார். அதன்பிறகு கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார். அடுத்து ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். அதன்பிறகு கைதி 2 படமும் வெளியாக உள்ளதாம். இப்படி ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் விதத்தில் விறுவிறுப்பான திரைக்கதையை அமைப்பவர் தான் லோகேஷ்.

இவர் எடுக்குற படங்கள் எல்லாமே ஹிட ;ஆகுதுன்னா அதுக்குப் பின்னாடி இவரது கடின உழைப்பு இருக்கு என்பதுதான் முக்கியம். ஏதோ வந்தோம், போனோம். லாட்டரில விழுந்த மாதிரி லக்குல வரல இவரது வெற்றி. அப்படின்னா எப்படி முன்னேறினார்? ஒருவன் வாழ்க்கையில் பெரிய ஆளாக என்ன செய்ய வேண்டும் என்பதை இவரே சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

இன்னைக்கு ஒரே நாள்ல ஒருத்தன் பெரிய ஆளா ஆகணும்னா ஒரே வழி லாட்டரி டிக்கெட் தான். ஆனா அதையும் ஒழிச்சிட்டாங்க. அதனால ஒரே வழி உழைச்சே ஆகணும். எவன் எது சொன்னாலும் எதைப் பத்தியும் கவலைப்படாம உழைச்சி மட்டும் தான் ஆகணும் என்கிறார் லோகேஷ் கனகராஜ். இவ்வளவு பெரிய வார்த்தையை இவர் அவ்வளவு எளிதாகச் சொல்லி விட முடியாது. எல்லாம் அவரது அனுபவப் பாடம்தான்.