சிவனை லிங்க உருவில் வழிபட இவ்ளோ காரணங்கள் இருக்கா? இது தெரியாம போச்சே…!

Published:

சிவன் கோவில்களில் எல்லாம் சிவலிங்கம் வைத்து இருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் சிவனின் உருவச்சிலைக்குப் பதிலாக லிங்கத்தை எதற்காக வைத்துள்ளார்கள் என்று நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியாது.

மேலோட்டமாகப் பார்த்தால் சிவனின் இன்னொரு அம்சம் தான் சிவலிங்கம் என்பார்கள். சிவனுக்குப் பதிலாக லிங்கம் வைக்க காரணம் இதுதான். என்னன்னு பார்ப்போமா…

லிங்கத்தின் தத்துவம் என்னவென்றால் இதில் சிவனும், பார்வதியும் இணைந்தே இருக்கிறார்கள். சிவனில்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவனில்லை. அதனால் தான் ஆதி அந்தமே இல்லாத பரம்பொருள் ஆன சிவபெருமான் உமையவள் ஆகிய சக்தியைத் தன்னுள் அடக்கி லிங்க வடிவில் காட்சி தருகிறார்.

Lingam
Lingam

முதலாவது அசல லிங்கம். ஆலயங்களுக்குள் பிரதிஷ்டை செய்யப்படுவது பரார்த்த லிங்கம். இந்த லிங்கமானது சுயம்பு லிங்கம், கானலிங்கம், தைவீக லிங்கம், ஆருட லிங்கம், மானுட லிங்கம் என 5 வகைப்படும்.

இவற்றில் சுயம்புலிங்கம் என்பது தானாகவே தோன்றியது. முருகன் மற்றும் பிள்ளயாரால் ஸ்தாபிக்கப்பட்டது கானலிங்கம். விஷ்ணுபகவானும், மற்ற தேவர்களாலும் ஸ்தாபிக்கப்பட்டது தைவீக லிங்கம். ரிஷி மற்றும் முனிவர்களால் ஸ்தாபிக்கப்பட்டது ஆருட லிங்கம்.

இந்த லிங்கத்தை ராட்சஷர்களும், அசுரர்களும் கூட ஸ்தாபித்து இருக்கிறார்கள். மனிதர்களால் ஸ்தாபிக்கப்பட்டதே மானுட லிங்கம். இதை ஸ்தூல லிங்கம் என்றும் சொல்வதுண்டு. இதயத்தில் இதயத்தில் உருவத்தை ஏற்றி அதையே இஷ்டமாக வழிபடுவது தான் 2ம் வகையான சலன லிங்கம்.

Lingam 2
Lingam 2

மூன்றாவதாக சிவலிங்கங்களை ஹோமங்களில் பூஜிப்பார்கள். அசலசல லிங்கம். நான்காவது வகை சலாசல லிங்கம். இதில் கான லிங்கமும், நவரத்தினங்களால் ஆன லிங்கமும் அடங்கும். சிவபூஜையை எல்லோராலும் செய்ய முடியாது. அதற்கு வேதாகமங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன.

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிவலிங்கத்தையும் நம் உடலுடன் ஒப்பிட முடியும்.

lingam 3
lingam 3

இந்தப்படத்தில் காட்டப்பட்டுள்ள படி, ஐம்புலன்களும் ஐந்து தலை நாகமாக சிவலிங்கத்தை சுற்றி உள்ளது. இது தான் விஷமமும் உள்ளது. சிவனின் தலையை சிரசு எனலாம். நினைவுகளை அழிக்கும் பகுதி இங்குதான் உள்ளது.

பாம்பானது சிவலிங்கத்தை சுற்றி உள்ளது எதைக் காட்டுகிறது என்றால் நம் சுற்றத்தை… அதாவது உறவுகளைக் காட்டுகிறது. அது லிங்கத்தை இறுகப் பற்றியுள்ளது நம் பந்த, பாசத்தை அதாவது பாசத்தை இறுகப் பற்றியுள்ளோம் எனக் குறிப்பிடுகிறது.

சிவன் கைவங்கிரியிலும், விஷ்ணு வைகுண்டத்திலும், பிரம்மா சத்தியலோகத்திலும் படத்தில் காட்டியபடி லிங்கத்தின் அம்சங்களாக உள்ளனர். வைகுண்டம் பகுதி தான் மேல்வயிறு. இங்கு தான் விஷ்ணுவின் காத்தல் தொழில் அதாவது ஜீரணித்தல் நடக்கிறது. அதற்கு அடுத்ததாக இடைப்பகுதியாக உள்ளது இடுப்பு. அதன் கீழ் உள்ளது பிரம்மாவின் சத்திய லோகம்.

இது தான் கீழ்வயிறு. இங்கு தான் உணர்ச்சி படைக்கப்படுகிறது. பிரம்மாவின் தொழிலே படைத்தல் தானே. அதனால் தான் அங்கு உணர்ச்சி படைக்கப்படுகிறது. இதை மக்கள் மத்தியில் என்றும் நினைவு படுத்தவே லிங்க சொரூபமாக சிவன் காட்சி அளிக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் உங்களுக்காக...