சூப்பர் ஸ்டார் பட்டத்தை சத்தமே இல்லாமல் டைட்டில் கார்டில் போட்ட நடிகர்! சும்மா விடுவாங்களா..?

Published:

தமிழ் சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே. ஏன் இந்திய அளவில் பல மொழிகளில் சூப்பர் ஸ்டார்ஸ் இருந்தாலும் அதில் முதலில் நினைவிற்கு வருவது ரஜினி மட்டுமே. அந்த அளவுக்கு நிலையான அந்தஸ்தை உலகளவில் பெற்றிருக்கிறார் ரஜினி.

ரஜினியின் இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்க பல வழிகளில் முயற்சி நடந்து வருகிறது. சமீபத்தில் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று சரத்குமார் கூறியதில் இருந்து ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

rajinikanth vijay

சில சமயங்களில் சரத்குமார் வீட்டிற்கே ரசிகர்கள் சென்று சத்தம் போட்டதாகவும் சரத்குமார் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதை பற்றி விஜய் வாய் திறந்து பேசவே இல்லை. அதன் காரணமாக விஜய்க்கும் அந்த எண்ணம் இருப்பதாகவும் சிலர் கூறிவந்தனர்.

இந்த நிலையில் ருத்ரன் படத்தின் புரோமோஷனுக்காக லாரன்ஸ் ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் அவர் ஒரு சம்பவத்தை கூறினார். அதாவது லாரன்ஸின் படமான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் மக்கள் சூப்பர் ஸ்டார் லாரன்ஸ் என பெயரிட்டு டைட்டிலில் போடப்பட்டிருக்கும், அதை பார்த்த ரசிகர்கள் சும்மா விடுவார்களா? ஆரவாரத்தில் குதித்தனராம். அப்போது உடனடியாக ஒர் பிரஸ் மீட் வைத்து லாரன்ஸும் இயக்குனர் சாய்ராமும் விளக்கமளித்திருக்கின்றனர். அதாவது அந்தப் படத்தின் இயக்குனர் ‘எனக்கு மிகவும் பிடித்ததனால் தான் அப்படி போட்டேன்’ என்று கூறியிருந்தார்.

rajinikanth ragha lawrence

ஆனால் அதை பற்றி சமீபத்தில் கூறிய லாரன்ஸ் ‘உண்மையிலேயே ரஜினி சார் மீதுள்ள பற்று காரணமாகத்தான் அந்த பட டைட்டிலில் மக்கள் சூப்பர் ஸ்டார் என்று நான் தான் போட சொன்னேன், ஒரு அப்பாவின் பெயரை பின்னாடி சேர்க்கமாட்டார்களா? அதே போல் தான் இப்படி போட சொன்னேன். மேலும் அந்த சமயத்தில் எனக்கு கொஞ்சம் டென்ஷன் அதிகம், எந்த அனுபவமும் இல்லை, அதனாலேயே இயக்குனரிடம் நீங்களே போட்ட மாதிரி பேசிடுங்கனு சொன்னேன்’ என்று கூறியிருக்கிறார் லாரன்ஸ்.

rajinikanth

ஆனால் ரசிகர்களின் மன நிலைமை ரஜினிக்கு ஒரு மகன் இருந்து அவரே சினிமாவின் நடித்து வந்தாலும் அவருக்கு முன்னாடி கூட சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை போட விடமாட்டார்கள். அந்த அளவுக்கு ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினி மட்டுமே என்று மனதில் நிறுத்தி கொண்டாடி வருகின்றனர் ரஜினி ரசிகர்கள்.

மேலும் உங்களுக்காக...