முதல்ல இதைப் படிங்க… நெற்றியில் 3 பட்டை போடுவது எதற்காகத் தெரியுமா?

கடன் வாங்கியவர்கள் கடன் கொடுத்தவர்களை ஏமாற்றும்போது உனக்கு பட்டை நாமம்தான் என்று ஏமாறுபவர்களைப் பார்த்து நண்பர்கள் கேலி செய்வர். ஆன்மிக அன்பர்கள் கோவிலுக்குச் சென்று பயபக்தியோடு இறைவனை வழிபட்டு நெற்றியில் விபூதியால் 3 பட்டை…

3 pattai

கடன் வாங்கியவர்கள் கடன் கொடுத்தவர்களை ஏமாற்றும்போது உனக்கு பட்டை நாமம்தான் என்று ஏமாறுபவர்களைப் பார்த்து நண்பர்கள் கேலி செய்வர். ஆன்மிக அன்பர்கள் கோவிலுக்குச் சென்று பயபக்தியோடு இறைவனை வழிபட்டு நெற்றியில் விபூதியால் 3 பட்டை போட்டுக் கொள்கின்றனர். இது வெறும் இந்து என்ற அடையாளத்திற்காக மட்டுமல்ல. இதற்குப் பின்னால் பல்வேறு விஷயங்கள் இருப்பது இப்போதுதான் தெரிகிறது. வாங்க பார்க்கலாம்.

கோவிலுக்குச் சென்று வழிபடும் பக்தர்கள் சிலர்,இறைவனை வணங்கிய பிறகு விபூதியைப் பெற்று,மூன்று விரல்களால் பட்டையாக பூசிக்கொள்வதை அனைவரும் பார்த்திருப்போம்.அல்லது நாமே கூட அதைச் செய்திருப்போம்.இப்படி மூன்று பட்டைகளை இட்டுக் கொள்வதற்கு ஒரு காரணம் உள்ளதாக சொல்கிறார்கள்.

மூன்று பட்டையாக திருநீற்றை பூசுவதற்கு பயன்படுத்தும் மூன்று விரல்களும் #ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவமாக சொல்லப்படுகிறது.இதில் ஆட்காட்டி விரலால் இடப்படும் கோடு ‘ரிக் வேதம்’, நடுவிரலால் இடப்படும் கோடு ‘யஜூர் வேதம்’, மோதிர விரலால் இடப்படும் கோடு ‘சாமவேதம்’ ஆகிய மூன்று வேதங்களைக் குறிக்கிறது.

இந்த மூன்று பட்டைகளும் வேதங்களை மட்டுமின்றி இன்னும் சிலவற்றை குறிப்பதாகவும் சொல்கிறார்கள்.அவற்றுள், பிரம்மா, விஷ்ணு, சிவன்.ஆகியோரையும், சிவன், சக்தி, ஸ்கந்தர்.ஆகியோரையும், அறம், பொருள், இன்பம். ஆகியவற்றையும், குரு, லிங்கம், சங்கமம் ஆகியவற்றையும், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றையும் குறிப்பதாக சொல்கிறார்கள்.

சிலர் கோவிலுக்கு எல்லாரையும் போல செல்வார்கள். எல்லாரையும் போல வழிபடுவார்கள். பட்டை போட்டுக் கொள்வார்கள். ஆனால் ஏன் எதற்கு என்று கேட்டால் ஒன்றுமே தெரியாது என்பர். எல்லாம் ஒரு நம்பிக்கைதான் என்று சமாளிப்பர். ஆனால் உண்மையை உணரும்போது மட்டுமே மனம் பேரானந்தத்தில் திளைக்கிறது.