சுபநிகழ்ச்சியின்போது வளர்பிறை நாளைக் கணக்கில் கொள்வது ஏன்? அறிவியல்ரீதியான உண்மை இதோ!

சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையைத் தான் எல்லாரும் தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? வாங்க பார்க்கலாம். நாம பெரியவங்க எதைச் செய்தாலும் அதை மூடநம்பிக்கை, முட்டாள்தனம்னு அறிவுஜீவி மாதிரி பேசுவோம். ஆனால் அது தவறு. பெரியவங்க சொன்னா…

சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையைத் தான் எல்லாரும் தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? வாங்க பார்க்கலாம்.

நாம பெரியவங்க எதைச் செய்தாலும் அதை மூடநம்பிக்கை, முட்டாள்தனம்னு அறிவுஜீவி மாதிரி பேசுவோம். ஆனால் அது தவறு. பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரின்னு சொல்வாங்க.

குறிப்பாக சுபநிகழ்ச்சிகளான கல்யாணம், புதுமனை புகுதல், காதுகுத்து, சடங்கு, கடை திறப்பு போன்ற சம்பிரதாயங்களுக்கு நாள், நட்சத்திரம், திதி என எல்லாமே பார்ப்பார்கள். அதெல்லாம் எதற்கு என்று நமக்கு எண்ணத் தோன்றும். சிலர் இதெல்லாம் தேவையா? எல்லா நாளுமே நல்ல நாள் தான். நல்ல நாள் பார்த்துத் தான் தாலி கட்டுறாங்க. அப்புறம் எப்படி டைவர்ஸ்ல போய் முடியுதுன்னு குதர்க்கமாகக் கேட்பாங்க.

அது அவரவர் கர்மவினைகளைப் பொருத்த விஷயம். சரி. விஷயத்துக்கு வருவோம். சுப நிகழ்ச்சிகள் நடத்தும்போது பொதுவாக வளர்பிறைக்கு அப்புறம் வரும் நாளையே கணக்கில் கொள்வார். வளர்பிறை முகூர்த்தமான்னு காலண்டரைப் பாருன்னு பெரியவங்க சொல்வாங்க.

ஆனால் அதுல பல அறிவியல் ரீதியான உண்மைகளும் மறைந்துள்ளன. அது தெரியாமல்தான் நாம் மூடநம்பிக்கை அது இதுன்னு பிதற்றி வருகிறோம். வாங்க உண்மை என்னன்னு பார்க்கலாம்.

நவக்கிரகங்களில் ஒருவரான சந்திரனே நம் மனதை இயக்குபவர். வளர்பிறையில் சந்திரன் ஆற்றலோடு திகழ்வார். அந்நாட்களில் நிலவின் அமுத கிரணங்கள் பூமியில் விழுவதால் மனம் உற்சாகத்துடன் இருக்கும். உற்சாகமாக இருக்கும்போது சுபநிகழ்ச்சிகள் குறைவின்றி சிறப்பாக நடந்தேறும். அதனால் தான் சுபநிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.