அற்புத நலன்களை அள்ளித் தரும் வைகுண்ட ஏகாதசி..! விரதம் கடைபிடிப்பது எப்படி?

Published:

2023 ம் ஆண்டு வரக்கூடிய முதல் விழா வைகுண்ட ஏகாதசி. 2.1.2023 அன்று (செவ்வாய்க்கிழமை) வருகிறது.

எம்பெருமான் நாராயணனரை நாம் வழிபட இருக்கும் முக்கியமான விரதம் வைகுண்ட ஏகாதசி. மாதம் தோறும் ஏகாதசி விரதத்தைக் கடைபிடித்தால் நல்லது. இதை மிகச்சரியாகக் கடைபிடித்தால் எத்தனையோ அற்புதமான நலன்கள் கிடைக்கும்.

ஆனால் முடியலயே என்பவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வரும் மோட்ச ஏகாதசி என்ற இந்த வைகுண்ட ஏகாதசி விரதத்தை முறைப்படி இருப்பவர்களுக்கு பாவங்களில் இருந்து விடுதலையும், மோட்ச உலகத்தில் இடமும் கிடைக்கும்.

Perumal 1
Perumal

திருமங்கை ஆழ்வார் திருக்கார்த்திகை நாளில் நாராயணரை வழிபட திருவரங்கம் செல்கிறார். பள்ளி கொண்ட பெருமாளை உள்ளன்போடு பாடி வழிபடுகிறார். எம்பெருமான் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறார். பெருமானே ஆழ்வார்கள் பாடிய பாசுரத்தைத் தாங்கள் விண்ணப்பம் செய்தால் மிக மகிழ்ச்சியாக இருக்கும் என்று சொல்கிறார்.

பெருமாள் ஏன் கேட்கணும்? அப்படி பெருமாளுக்கு விண்ணப்பம் பண்ணும்போது நாம அதைப் படிப்போம். அதைக் கேட்போம் அல்லவா அதனால் தான் அப்படி கேட்கிறார். அதற்கு எந்த பாசுரத்தைக் கேட்கணும் என்று பெருமாள் கேட்கிறார். நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியைத் தாங்கள் கேட்டருள வேண்டும் என்கிறார்.

நம்மாழ்வாரின் 1000 பாசுரங்களையும் கேட்க வேண்டும். வைகுண்ட ஏகாதசிக்குப் பிறகு 10 நாள்களும் தலா 100 பாடல்கள் வீதம் நீங்கள் தினமும் கேட்க வேண்டும் என்கிறார். அதற்கு தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று ரங்காநதரிடமே உத்தரவு பெற்றார்.

அதன்பிறகு வந்ததுதான் எம்பெருமானுக்கு பாசுரங்களை விண்ணப்பம் செய்யக்கூடிய ராப்பத்து என்ற நிகழ்வு. இதுதான் முதலில் துவங்குகிறது. வைகுண்ட ஏகாதசிக்குப் பிறகு வரும் 10 நாள்களும் மிக அழகாக எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்யப்படுகிறது.

அதன்பிறகு நாத முனிகள் அதே போல திருக்கார்த்திகை திருநாளில் எம்பெருமானை வழிபாடு செய்கிறார். அவருக்கும் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு சுவாமி இப்படி ஒரு 1000 தானே கேட்குறீங்க. மிச்சம் இருக்குற பாசுரங்களையும் தாங்கள் கேட்டருளணுமே என்கிறார்.

அதற்கு என்ன செய்வது என்றும் கேட்கிறார். ராப்பத்து என்று சொல்லக்கூடிய பின்னாள் பத்து கொண்டாடுவதைப் போல வைகுண்ட ஏகாதசிக்கு முன்னால் பகல் பத்து என்று வைத்துக் கொள்வோம் என்கிறார்.

இதைத் தான் திருவரங்கத்தில் அரையர் சேவை என்ற பெயரில் எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்து வருகிறோம். இப்படி வந்தது தான் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரக்கூடிய பகல் பத்து, ராப்பத்து என்ற விழாக்கள்.

இவற்றில் முக்கியமான விழா வைகுண்ட ஏகாதசி. இந்த நாளில் விரதமிருந்தால் இறந்த பின் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது ஐதீகம்.

கொண்டாடும் விதம்

1.1.2023 மதிய உணவுக்கு அப்புறம் இரவில் எளிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். 2.1.2023 அதிகாலை 4 மணிக்கே நடைதிறப்பு நடைபெறும். அன்று திருவரங்கத்தில் அதிகாலை நடை திறக்கும். வைகுண்ட வாசல் திறப்பு…சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். அதை முடிந்தால் நேரில் சென்று பாருங்க.

அன்று சாமி தரிசனம் முடிந்ததும் விரதத்தைத் தொடங்க வேண்டம். 2ம் நாள் அதாவது 3ம் தேதி (3.1.2023) அன்று உபவாசம் இருக்கணும். தண்ணீர் மட்டும் துளசி போட்டு தீர்த்தமாக எடுத்துக் கொள்ளலாம்.

perumal 2
perumal 2

அதன்பிறகு பால், பழம், அவல், பொரி, கடலை என்று சாப்பிட்டும் விரதத்தைக் கடைபிடிக்கலாம். அதிகாலை போக முடியாதவர்கள் மாலை நேரத்திலாவது பெருமாள் கோவிலுக்குப் போய் வரலாம். அன்று பெருமாளைத் தரிசனம் பண்ணுவது ரொம்ப விசேஷம். வீட்டிலும் பெருமாள் படத்திற்கு மாலை போட்டு விட்டு தூப தீப ஆராதனைகள் காட்டி பூஜை செய்யலாம்.

சொர்க்கவாசல் திறந்த அன்று இரவு முழுக்க கண்விழித்து இருக்க வேண்டும். மறுநாள் 3ம் தேதி விடியற்காலை 4 மணிக்கே எழுந்து நீராடி விட்டு இந்த விரதம் இருக்கக் காரணமாக இருந்த நாராயணருக்கு நாம மனதார நன்றி சொல்லணும்.

அன்று 21 காய்களைப் பயன்படுத்தி சமைப்பாங்க. முக்கியமாக நெல்லிக்காய், பூஜை முடிந்ததும் இந்த நாளில் மாலை நேரத்திற்குப் பிறகு தான் தூங்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த விரதத்தை இருக்கலாம். விரதம் இருந்து எம்பெருமான் நாராயணரோட மகிமையைப் பரிபூரணமாக பெற்று மகிழலாம்.

மேலும் உங்களுக்காக...