டீ , காபி உடன் பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? எச்சரிக்கை பதிவு!

Published:

தினமும் டீ , காபி உடன் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவாரா நீங்கள் , குழந்தைகள் விரும்பு சாப்பிடுவதால் பாலுடன் பிஸ்கட் கொடுப்பவரா நீங்கள், அதிகம் விரும்பு பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள் இது நல்லதா கேட்டதா? என மருத்துவர்கள் கூறும் கருத்து இதோ ….

பொதுவாக டீ , காபி உடன் பிஸ்கட் தொட்டு சாப்பிடுவது இயல்பான ஒன்று. பெரும்பாலான வீடுகளில் பள்ளி குழந்தைகள் காலை உணவாக இந்த டீ , காபி உடன் பிஸ்கட் தான் அமைகிறது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு விரைவாகவும் எளிமையாகவும் இருக்கும் உணவு இந்த காபி பிஸ்கட் தான்.

இதற்கு காரணம் பாலுடன் சாத்தனா பிஸ்கட் தானே சாப்பிடுகிறார்கள் என்பது தான் பெற்றோர்களில் நம்பிக்கையான எண்ணமாக அமைகிறது. நாம் அதிகமாக சாப்பிடும் பிஸ்கட்களின் மூலப்பொருள் ரீபைண்ட் வீட் எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை அதாவது மைதா தான்.

அப்படி பெரும்பாலான பிஸ்கட்களில் உள்ள மூலப்பொருள் மைதாவாகத்தான் உள்ளது. என்பதால் இந்த பிஸ்கட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றது அல்ல என கூறுகிறார்கள் மருத்துவ வல்லுநர்கள் .

குறிப்பாக கிரீம் பிஸ்கட் , குளுக்கோஸ் பிஸ்கட் , டைஜெஸ்ட்டிவ் பிஸ்கட் என குழந்தைகளுக்கு கொடுக்கும் பல விதமான பிளேவர்களில் வரும் பிஸ்கட் குறித்து பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த பழக்கத்தால் தான் 30 வயதிற்கு மேல் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் தற்போழுது 5 வயது குழந்தைகளிடம் காணப்படுகிறது என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். காலை உணவாக இந்த பிஸ்கட் சாப்பிட்டால் அதில் உள்ள வேதி பொருட்கள் குழந்தைக்கு செரிமானம் அடையாமல் பல நோயிற்கு வழிவகுக்கிறது .

கருவாட்டு குழம்புடன் போட்டி போடும் தட்டை பயறு கத்திரிக்காய் குழம்பு… மணமணக்கும் கிராமத்து பக்குவத்தில்!

குழந்தைகளுக்காக ராகி பிஸ்கட் , நவதானிய பிஸ்கட் இருக்கிறது , மேலும் கொழுப்புகளிலும் நல்ல கொழுப்பான வெண்ணெய் , நெய் என இது எல்லாம் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அன்றாடம் பிஸ்கட் சாப்பிடுவதை குறைத்து கொண்டு அதற்க்கு பதிலாக முலை கட்டிய பயிறு, தானியங்கள் , பழங்கள் ,காய்கறிகள் , பாதம் , இளநீர் என சாப்பிடுவது நல்லது.

 

 

 

மேலும் உங்களுக்காக...