மிஸ் பண்ணிடாதீங்க… வைகாசி விசாகத்துக்கு எவ்ளோ சிறப்புகள்னு பாருங்க…!

வைகாசி விசாகம் வரும் ஜூன் 9ம் தேதி வருகிறது. இதையொட்டி இந்தத்தினத்தைப் பற்றிய சிறப்பம்சங்களைப் பார்க்கலாம். முருகப்பெருமான் அவதரித்த நாள் வைகாசி விசாகம். அதனால் தான் அந்தத் தினத்தை விசேஷமாகக் கொண்டாடி வருகிறோம். வைகாசி…

வைகாசி விசாகம் வரும் ஜூன் 9ம் தேதி வருகிறது. இதையொட்டி இந்தத்தினத்தைப் பற்றிய சிறப்பம்சங்களைப் பார்க்கலாம். முருகப்பெருமான் அவதரித்த நாள் வைகாசி விசாகம். அதனால் தான் அந்தத் தினத்தை விசேஷமாகக் கொண்டாடி வருகிறோம்.

வைகாசி பௌர்ணமியில் சிவபெருமானுக்கு மகிழம்பூ நிறத்தில் பட்டாடை சாற்றி 108 பத்மராக கற்களால் மாலை அணிவிக்க வேண்டும். அத்துடன் எள் சாதத்தை நைவேத்தியமாக வைத்து வழிபட்டால் பாவங்கள் அத்தனையும் நீங்கும் என்பது ஐதீகம்.

தென் மாவட்டங்களில் உள்;ள அம்மன் கோவில்களில் கொடை விழா இந்த மாதத்தில் இருந்து தான் தொடங்குகிறது. ராம, ராவணனின் யுத்தம் இந்த மாதத்தில் தான் நடந்ததாக சொல்வர். வைகாசி பௌர்மணியில் தான் மணிபல்லவத் தீவில் மணிமேகலையிடம் தீவதிலகை என்ற காவல் தெய்வம் தோன்றி அள்ள அள்ளக் குறையாத அட்சயப் பாத்திரத்தை வழங்கியதாம்.

வைகாசி மாதத்தில் தங்கள் பகுதியில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு. வள்ளலார் வடலூரில் சத்தியஞானசபையை வைகாசி மாதத்தில் தான் நிறுவினார்.

பழனி, திருச்செந்தூர், சுவாமி மலை போன்ற முருகனின் அறுபடை வீடுகளில் வைகாசி விசாகம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அதிலும் குருவிற்கு உரிய தலம் திருச்செந்தூர் என்பதால் அங்கு 10 நாள்கள் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது.

எமதர்மராஜனுக்கு உரிய நாளும் வைகாசி விசாகம்தான். அன்று அவரை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்குமாம். கன்னியாகுமரி அம்மனுக்கு ஆராட்டு விழா வைகாசி விசாகத்தில் தான் நடக்கும். காஞ்சி கருட சேவையும் வைகாசி விசாகத்தில் தான் நடக்கும். இந்திரன் வைகாசி விசாகத்து அன்றுதான் சுவாமிமலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். திருப்போரூரில் சிதம்பர சுவாமிகள் வைகாசி விசாகத்தில் தான் சித்தி அடைந்தார்.