இன்று அதி விசேஷமான நாள்…! கேட்டது கேட்ட படி கிடைக்க வேண்டுமா…நீங்க செய்ய வேண்டியது இதுதான்…!

Published:

தை மாதத்தில் வருகின்ற மிக அதி விசேஷமான முருகனுக்கு மிகவும் உகந்த நாள் இந்த தைப்பூசம். இன்றைய தினம் (5.2.2023) அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

கேட்டது கேட்டபடி கிடைக்க வைப்பது முருகன் வழிபாடு. இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் தைப்பூச விழா கோலாகலமாக நடக்கும்.

அறுபடை வீடுகளில் பழனி மலை முருகன் கோவிலில் தான் சிறப்பு வாய்ந்த நாள். இந்த நாளில் தான் அன்னை பார்வதி முருகனுக்கு வேல் வழங்கிய நாள். முருகர் அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்த நாள். சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வந்த நாள்.

அற்புத சக்தி

சூரியனின் அம்சமாக சிவபெருமானும், சந்திரனின் அம்சமாக பார்வதி தேவியும் இணைந்து ஒரே அம்சமாக அவங்க ஆற்றலை வெளிப்படுத்துறாங்க. அதனால இன்றைய தினம் பிரபஞ்சமே ரொம்ப சக்தி வாய்ந்ததாக இருக்கும். விரதமிருந்து வழிபடும்போது அந்த அற்புத சக்தியை நமக்குள் உணரலாம்.

Oam saravanapava
Oam saravanapava

இந்த நாளில் விரதமிருந்தால் கேட்டது கேட்ட படி கிடைக்கும். அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து கடவுளை வழிபடுங்க. சிவன், அம்பிகை, முருகனை வழிபாடு செய்யுங்க. அன்றைய தினம் 6 அகல்விளக்கில் நெய்தீபமாக ஏற்றி ஓம்சரவண பவ என எழுதி பூஜை பண்ணுங்க.

இந்த அகல்விளக்கை வெற்றிலை மீது ஏற்றுங்க. இப்படி செய்கையில் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயமாகக் கைகூடும். பூஜை அறையிலேயே வேல் வரைந்து வழிபாடும் செய்யலாம்.

முருகர் கையில் வைத்துள்ள வேல் மாதிரியே வரைந்து அதற்கு பூஜை செய்து வழிபடலாம். எதிரிகள் பயம் நீங்கும். கேட்டது கிடைக்கும். சொந்த வீடு கட்டும் யோகம் கிடைக்கும். குடும்பப் பிரச்சனைகள் நீங்கும். ஓம் சரவணபவ என்ற பிரணவ மந்திரத்துக்கு சக்திகள் அதிகம்.

பாரம்பரிய வழிபாடு

முருகன் வழிபாடு தான் பாரம்பரிய வழிபாடு. நம் சம்பிரதாயங்களில் பாரம்பரியமாக வழிபட்ட நம் முன்னோர்களின் வழிபாடு இதுதான். அப்போதெல்லாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து கோவிலில் விழா எடுத்து சிறப்பாகச் செய்வார்கள். பெண்களாக இருந்தால் பச்சைக்கலர் சேலை, ஆண்களாக இருந்தால் பச்சைக்கலர் வேட்டி, துண்டு அணியலாம்.

Abishekam 1
Abishekam

சென்னையில் திருப்போரூர் சக்திவாய்ந்த தலம். பழனி, திருச்செந்தூர் சிறப்பு வாய்ந்தவை. பஞ்சபூதத் தத்துவங்களில் செய்யப்பட்டது தான் பஞ்சாமிர்தம். நைவேத்தியத்தில் சிறப்புவாய்ந்தது. 5 பொருள்களால் ஆனது.

பரிகாரங்களில் எதுவும் முடியலை என்றால் திருச்செந்தூர் முருகனைத் தான் வேண்டுவார்கள். இந்த தைப்பூசத்தில் பஞ்ச பூத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பஞ்சாமிர்தத்தை நைவேத்தியமாக செய்து முருகப்பெருமானை வழிபடுங்கள்.

காவடி

Kaavadi
Kaavadi

காவடி எடுப்பது உடலுக்கு மிகவும் நல்லது. நம் தோள் மீதும், தலை மீதும் காவடியைத் தூக்கிச் செல்லும்போது நம் உடலில் உள்ள சக்கரங்கள் அற்புதமாக வேலை செய்யும். சகஸ்ராரம் சக்கரம் வேலை செய்யத் துவங்கிவிடும்.

பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர், மோர் கொடுக்கலாம். பழனி, திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் பாதயாத்திரை செல்வது வழக்கம்.

இப்படி சின்ன சின்ன விஷயங்களைச் செய்யும் போது நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நாமே பாதயாத்திரை சென்று முருகப்பெருமானைத் தரிசிக்கலாம். போக முடியாதவர்கள் அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று மனமாற வேண்டி வழிபடலாம்.

Muruga2
Muruga2

முருகன், வள்ளி கும்மி பாட்டுகளை குழந்தைகளைப் பாட வைத்துக் கொண்டாடலாம். வீட்டில் முருகர் படம் இருந்தால் நைவேத்தியம் வைத்து பூஜை செய்து முருகப்பெருமானை வழிபடுங்க. அன்றைய தினம் காலையில் விரதமிருந்து மதியம் படையல் போட்டு குடும்பத்தோடு வழிபட்டு சாப்பிட்டு விரதத்தைப் பூர்த்தி செய்யுங்க.

 

 

 

மேலும் உங்களுக்காக...