வேட்புமனுவை வாபஸ் பெற ஓபிஎஸ் அணி முடிவு?

By Bala Siva

Published:

ஓ பன்னீர்செல்வம் சார்பில் நிறுத்தப்பட்டு இருக்கும் வேட்பாளர் வாபஸ் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக தற்போது இரு அணிகளாக பிளவுப்பட்டு இருக்கும் நிலையில் இரு அணிகளின் சார்பிலும் ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளனர் என்பதும் இருவருமே தேர்தல் பிரச்சாரம் செய்ய தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொது குழு வழக்கில் ஓ பன்னீர் செல்வம் தரப்பையும் இணைத்து புதிய பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் அந்த பொதுக்குழுவில் வேட்பாளரை தேர்வு செய்து அந்த வேட்பாளரை அவைத்தலைவர் தேர்தல் ஆணையத்துக்கு முன்மமொழிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனை அடுத்து ஓ பன்னீர்செல்வம் தரப்பையும் அழைத்து விரைவில் அதிமுக பொது குழு கூட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் தென்னவன் இன்னும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்காத நிலையில் ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து வேட்பாளர் வாபஸ் பெற இருப்பதாக கூறப்படுகிறது.

ஓ பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தனது வேட்பாளர்களை வாபஸ் பெற திட்டமிட்டுள்ளதாகவும் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யும் வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுக்குழுவில் தங்கள் தரப்புக்கு போதுமான ஆதரவு கிடைக்காத சூழல் நிலவுவதால் தென்னரசன் தான் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதனால்தான் அவர் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...