திருச்செந்தூர் கோபுரத்தைப் பார்த்த உடனேயே நமக்கு முருகனையே பார்த்த மாதிரி ஒரு பரவச உணர்வு வரும். அப்படி ஒரு சந்தோஷம். அவ்வளவு ஒரு மகிழ்ச்சி அமைந்திருக்கும். அந்த அற்புதமான ஆலயத்தை நமக்கு செய்து கொடுத்தது 5 பேர். அவங்க யாருன்னு தெரியுமா? மௌன சுவாமி, காசி சுவாமி, ஸ்ரீவள்ளிநாயக சுவாமி, ஆறுமுக சாமி, தேசிக மூர்த்தி சாமி.
இவர்கள் ஒவ்வொருவரும் சாதுக்கள். சந்நியாசிகள். இவர்களுக்கு முருகன் அவ்வளவு ஆற்றல்களைக் கொடுத்துள்ளார். பக்தர்கள் கொடுத்ததை வாங்கிக் கொண்டு திருப்பணி செய்து வந்தனர். 137 அடி உயர ராஜகோபுரம். 9 நிலைகளைக் கொண்டது. கடலுக்கு அடியில் இவ்வளவு உயரமாகக் கட்டணும்னா எவ்வளவு ஆழமாக அஸ்திவாரம் போட்டு இருப்பாங்க.
அப்படி பிரம்மாண்டமா இதைக் கட்டிக்கிட்டு இருந்தாங்க. இந்த 5 சுவாமிகளில் தேசிக மூர்த்தி சுவாமிகள் பன்னீர் இலைகளில் விபூதியை வச்சி ‘முருகா என்ன பண்றதுன்னே எனக்குத் தெரியல. நீதான் எனக்கு வழி காட்டணும்’னு சொல்றாரு. வேலைசெய்ததும் வேலைக்காரங்க எல்லாம் இவரிடம் சம்பளத்துக்காக வந்து நிக்கிறாங்க. இவரும் பன்னீர் இலையில விபூதியை வச்சி ‘பிள்ளையாரைத் தாண்டிப் போய் நீ திறந்து பாரு. உனக்கான சம்பளம் இருக்கும்’னு சொல்றாரு.
அவங்களும் அதே மாதிரி திறந்து பார்க்கிறாங்க. அன்று அவர்கள் என்ன வேலை செய்தார்களோ அதற்கேற்ற ஊதியம் அதில் இருந்தது. பன்னீர் இலை விபூதிக்கு எப்படி ஒரு மகத்துவம் இருக்குன்னு நினைச்சிப் பாருங்க. இந்த விபூதி நோய்களை நீக்கக்கூடியது. ஆதிசங்கரரே சொல்லி இருக்கிறார். இது நோயை மட்டுமல்ல. வேலை செய்தவர்களின் வறுமையையும் போக்கி இருக்கு என்பது அதிசயமாக உள்ளது.
6 நிலைக்குப் பிறகு இந்த அதிசயம் நடக்கவில்லை. முருகனிடம் வேண்ட அருகில் உள்ள காயல்பட்டணத்தில் வள்ளல் சீதக்காதி இருக்காரு. அவரைப் போய் பாருங்கன்னு சொல்றாங்க. அவரோ ஒரு மூட்டை உப்பை எடுத்துக் கொடுக்காரு. ‘என்ன இது’ன்னு கேட்கிறாங்க. அவரோ ‘திருச்செந்தூரில் போய் பாருங்க’ன்னு சொல்றாங்க. அங்கே போய் பார்த்தால் அதெல்லாம் தங்கமாக இருக்கிறது. அதை வைத்து ராஜகோபுரத்தைக் கட்டி முடிக்கிறாங்க. மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.