கோவிலில் முதலில் நாம் வணங்க வேண்டிய கடவுள் யார்? கடைசியாக வணங்க வேண்டிய கடவுள் யார்? இந்தக் கேள்வி பொதுவாக பலருக்கும் வருவதுண்டு. சிலர் கோவிலுக்குள் போனதும் எதிரில் என்னென்ன தெய்வங்கள் உண்டோ அத்தனையையும் வரிசைப்படி இல்லாமல் பார்த்த உடனே வழிபட்டபடிச் செல்வர். அவர்களுக்குப் பிரகாரம் எப்படி சுற்றுவது என்றும் தெரியாது.
ஆனால் முறைப்படி என்ன செய்ய வேண்டும்? எந்தக் கடவுளை முதலில் வணங்குவது? கடைசியில் எந்தக் கடவுளை வணங்குவதுன்னு பார்ப்போம். இது தவிர மற்ற பல ஆன்மிக சந்தேகங்களுக்கான விளக்கங்களையும் இங்கு பார்க்கலாம்.
கனவில் பாம்பு வருவதால் பயப்பட வேண்டாம். பொதுவாக கனவில் பாம்பு வந்தால் பணம் வந்து சேரும் என்பார்கள். முருகனுக்கு அர்ச்சனை செய்து பயத்தைப் போக்கிக் கொள்ளுங்கள்.
பூஜை மற்றும் விரதங்களில் அதிக அக்கறை காட்டுவது பெண்கள் தான். அதே நேரம் ஆண்களும் பூஜை, விரதங்களில் ஈடுபடவே செய்கிறார்கள்.
சாம்பிராணி புகை போட்டும், தேங்காயில் சூடம் கொளுத்தி வைத்தும் மிளகாய் வைத்தல், காலடி மண்ணைச் சுற்றி நெருப்பில் போட்டும் இப்படி ஏதாவது ஒன்றைச் செய்து திருஷ்டி கழிக்கலாம். ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகியவை திருஷ்டி சுத்த ஏற்ற நாள்கள். கோவிலில் முதலில் நுழைந்ததும் விநாயகரை வழிபட வேண்டும். தொடர்ந்து பிரதான மூலவரை தரிசித்து வலம் வர வேண்டும்.
அடுத்து அம்பாள் மற்றும் பரிவாரங்களை தரிசித்து வலம் வர வேண்டும். அதற்கு அடுத்ததாக நவக்கிரகம், சண்டிகேஸ்வரர், பைரவர் ஆகியோரைத் தரிசிக்க வேண்டும். அந்த வகையில் கடைசியாக நாம் தரிசிப்பது பைரவரைத்தான். அதன்பிறகு சிறிது நேரம் கோவிலில் இருந்து மன அமைதியைக் கண்டுவிட்டு அதன்பிறகே வெளியேற வேண்டும்.